3 முதல் 18 ஆண்டுகள் வரை… கட்டாயக் கல்வி! புதிய கல்விக் கொள்கை!

இந்தியா கல்வி சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
mhrd - 2026
  • மனிதவள அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகமாக மாற்றம்.
  • புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • கட்டாய கல்வி 3 முதல் 18 ஆண்டுகள் வரை.

தேசிய கல்வி முறையை முழுவதுமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை மத்திய கல்வி அமைச்சகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் தெரிவித்தார்.

கடந்த 34 ஆண்டுகளாக கல்வி முறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், இப்போது புதிய கல்வி முறைக்கு பெரும் தேவை உள்ளது என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

new education policy - 2026

புதிய கல்வி முறை வேலைவாய்ப்பைப் பெற உதவும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நான்கு கட்டங்களாக புதிய தேசிய கல்வி கொள்கை இருக்கும் என்றார்.

உயர்கல்வி செயலாளர் அமித் கரே, 2035 ஆம் ஆண்டில், குறிப்பாக உயர் கல்வியில், 50 சதவீத மொத்த சேர்க்கை விகிதத்தை அடைவதே இலக்கு என்றார். அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்கான குறிக்கோளோடு கூட மாணவர்கள் மீதான பாடத்திட்ட சுமையை குறைப்பதும் புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் என்றார்.

ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 3 முதல் 18 வயதுடையவர்களுக்கு கல்வி கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

முந்தைய 10 + 2 வின் இடத்தில் புதிய கல்வி முறையின் 5 + 3 + 3 + 4 செயல்படுத்தப்படும். முதல் ஐந்து ஆண்டுகள் அடித்தள பாடமாக கருதப்படும்.

அதன்பிறகு மூன்று ஆண்டுகள் முன் தொடக்கப் பள்ளியாகவும், கிரேட் 1, கிரேட் 2 ஆகவும் கருதப்படும். ஐந்தாண்டு அடித்தளப் பாடத்தில் முதல் மூன்று ஆண்டுகள் 3 முதல் 6 வயது குழந்தைகளுக்கும், அதன்பின் இரண்டாண்டுகள் 6 முதல் 8 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஒன்று முதல் இரண்டு வகுப்புகள் வரையிலான கல்வி அளிக்கப்படும்.

பின்னர் 8 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை, 11 முதல் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மற்றும் 14 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நடத்த ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

டிப்ளோமா படிப்பு இரண்டு ஆண்டுகள் மற்றும் தொழிற்கல்வி காலம் ஒரு வருடம். மேலும் பட்டப்படிப்பின் காலம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக மாற்றப்படும். அவர் மேலும் கூறுகையில், தேர்வுகளின் முன்னுரிமையை குறைக்கவும், திறன்களின் அடிப்படையில் தேர்வுகளை நடத்தவும், ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பிக்கப்படுவதை உறுதி செய்யவும் முடிவு செய்துள்ளது.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

ரிபோர்ட் கார்டுகள், மதிப்பெண்களை அடிப்படையாகக் கொள்ளாமல் நுட்பம் மற்றும் திறன்களின் அறிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிக்கை கூறியது. அதோடுகூட கலைக்கும் அறிவியலுக்கும் இடையில் எந்த வேறுபாடும் காட்டப்பட மாட்டாது என்றும் அவர் கூறினார்.

hrd - 2026

நாட்டில் மொத்தம் 45,000 அனுபந்த கல்லூரிகள் உள்ளன. அவற்றுக்கு கிரேடட் அடானமியின் கீழ் இளங்கலை, அகடமிக், நிர்வாக மற்றும் நிதி சுயாட்சி ஆகிய பிரிவுகளின் கீழ் அங்கீகாரம் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். இ-படிப்புகள் உள்ளூர் மொழிகளில் வடிவமைக்கப்படும் என்றார்.

மெய்நிகர் ஆய்வகங்களை (வர்ச்சுவல் லேப்ஸ்) உருவாக்க தேசிய கல்வி தொழில்நுட்ப மன்றம் (NETF) அமைக்கப்படும் என்றும் தெரியப்படுத்தினார்.

தற்போதைய கல்வி முறையில் டீம்டு பல்கலைக் கழகங்களும், மத்திய பல்கலைக்கழகங்களும் மற்றும் சுயாதீன நிறுவனங்களும் வெவ்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவற்றின் இடத்தில் ஒரேவிதமான நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.