ஸ்மார்ட் கார்டில் பெயர் உள்ள அனைவருக்கும் முககவசம் முதல்வர்!

Published:

tn-cm

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சென்ற அவரை வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் வரவேற்றனர்.

இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ரூ.73.53 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

மேலும் ரூ.169.77 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுக்குள் உள்ளது என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு 3 வருடத்தில் ரூ.583.45 கோடி கடன் கொடுக்கப்பட்டுள்ளது. ராணி பேட்டை மாவட்டத்தில் 3,350 காய்ச்சல் முகாம்கள் நடப்பட்டள்ளது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் உடனே தீர்வு காணப்படுகின்றது. மேலும் கொரோனாவை தடுக்க குடும்ப அட்டையில் பெயர் உள்ள அனைவருக்கும் விலையில்லா முகக்கவசம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

நேதாஜி மார்க்கெட் வியாபாரிகளின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு புதிய மார்க்கெட் கட்டித் தரப்படும் இதற்கிடையில் தென் பெண்ணை ஆறு மற்றும் பாலாறு இணைப்புத் திட்டம் ரூ 648 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img