சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு ஒரே நாளில் 30000 பேர் பயணம்!

அடடே... அப்படியா? தமிழகம் லைஃப் ஸ்டைல்
bus stand

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதை அடுத்து, கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

தற்போது எட்டாம் கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஊரடங்குகளில் ஒவ்வொரு தளர்வாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகிறது.

தமிழகம் முழுவது 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டது. சென்னை மண்டலம் மற்றும் காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய இரண்டு மண்டங்களை தவிர்த்து பிற மண்டலங்களுக்கு பொது போக்குவரத்து ஜூன் ஒன்றாம் தேதி முதல் தொடங்கப்பட்டது. அப்போது மண்டலங்களுக்குள் மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டது.

பின்னர் ஜூன் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை சென்னை மண்டல தவிர்த்து ஏனைய மண்டலங்களின் பேருந்துகள் இயக்கப்பட்டது. அதையடுத்து, கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது.

ஜூலை 1 ஆம் தேதி முதல் அனைத்து பேருந்து சேவையும் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு, கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது.

நேற்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் இருந்து ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்த அரசு பேருந்துகளில் வெளியூர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

முதல் நாளே நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலிருந்து சென்னையில் இருந்து மக்கள் சென்றுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.