அரசு உத்தரவை மீறி நடைபெற்ற… கிராம சபைக் கூட்டங்கள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
village-meeting-in-madurai
village-meeting-in-madurai

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அரசு உத்தரவை மீறி நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அரசின் தடை உத்தரவை மீறி பல்வேறு இடங்களில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது

முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு உதவி தலைவர் கேபிள் ராஜா தலைமை வகித்தார் குருவித்துறை ஒன்றிய கவுன்சிலர் பசும்பொன் மாறன் வார்டு கவுன்சிலர் முல்லை சக்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்

தென்கரையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு ஊராட்சி துணைத் தலைவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த கிருஷ்ணன் தலைமை வகித்தார் வார்டு கவுன்சிலர்கள் மற்றும் திமுகவினர் கலந்துகொண்டனர் மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு மேலக்கால் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி தலைமை வகித்தார்

ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்தாண்டி முன்னிலை வகித்தார் வார்டு உறுப்பினர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர் திருவேடகம் ஊராட்சியில் வார்டு கவுன்சிலர் தலைமை வகித்தனர் இதேபோல சோழவந்தான் அருகே சுற்றுவட்டார பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது

மத்திய அரசின் வேளாண் திருத்த மசோதா திரும்பப் பெற வலியுறுத்தி அதிகளவிலான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது மற்றும் அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.