35 ஆண்டுகள் கழித்து பெண்குழந்தை… தனி ஹெலிகாப்டரில் தாயையும் சேயையும் அழைத்து வந்த புகுந்த வீட்டார்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
rajasthan
rajasthan

35 ஆண்டுகள் கழித்து குடும்பத்தில் பிறந்த முதல் பெண் குழந்தையை வரவேற்கும் வகையில், அக்குழந்தையையும் அதன் தாயாரையும் ஹெலிகாப்ப்டரில் பயணிக்க வைத்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது.

ராஜஸ்தானின், நாக்பூர் மாவட்டத்தில் உள்ள நிம்பரி சந்தாவந்த் (Nimbari Chandawatan) என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அனுமன் பிரஜபத். இவருக்கும் இவரது மனைவி சுகி தேவிக்கும் கடந்த மாதம் பெண்குழந்தை பிறந்தது.

இதைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து சுகி தேவியும் அவரது குழந்தையும் ஹர்சோவ்லவ் கிராமத்தில் உள்ள சுகி தேவியின் பெற்றோரது வீட்டுக்குச் சென்றனர். இதைத்தொடர்ந்து சுகி தேவி மற்றும் பெண் குழந்தையை வரவேற்க அனுமன் பிரஜபத்.

ரூ. 4.5 லட்ச மதிப்பில் தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்தார். நிம்பரி சந்தாவந்த் கிராமத்திலிருந்து அனுமன் பிரஜபத் மற்றும் உறவினர்களும் ஹெலிகாப்டரில் ஹர்சோவ்லவ் கிராமத்திற்குச் சென்று அவர்களது பெண்குழந்தையும், தாய் சுகி தேவியையும் அழைத்துவந்தனர்.

இவர்களது குடும்பத்தில் 35 வருடங்கள் கழித்துப் பிறந்த முதல் குழந்தையை வரவேற்க இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனுமன் பிரஜபத்தின் தந்தை மதன்லால் கும்ஹார் இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளார். ஆண்குழந்தைகளை மட்டுமே வரவேற்கும் இச்சமூகத்தில் பெண்குழந்தையை வரவேற்கத் தனி ஹெலிகாப்டர் அமர்த்தி உள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.