தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
dhanushkodi
dhanushkodi

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் உள்ள பல சுற்றுலா தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒவ்வொரு தடைகளாக நீக்கப்பட்டு வருகின்றன.

தற்போது பெரும்பாலான சுற்றுலாப் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை சுற்றுலா பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை என்ற பகுதியில் தமிழ்நாடு சார்பில் ட்ரைலத்தான் போட்டிகள் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த போட்டிகள் முடிந்த பின்னர் மீண்டும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் சுற்றுலாத் துறை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.