வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் குருவிப் பூ!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம்
flower 1
flower 1

வருடம் ஒரு முறை மட்டுமே பூக்கும் மஞ்சள் நிற சிட்டுகுருவி பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல் தமிழகத்துள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று. வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகள் அதிக அளவில் உள்ளனர்.

கொடைகானல் மலைபகுதிகளில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மஞ்சள் நிற குருவி பூக்கள் பூக்க தொடங்கியுள்ளன. இந்டஹ் பூவின் அறிவியல் பெயர் ரோட்டலேரியா வலிடா என்பதாகும்.

kodaikanal
kodaikanal

இந்த பூவின் அல்லி இதழை பிடித்து இழுக்கும் போது குருவி தனது தலையை ஆட்டுவது போல் இருப்பது இந்த பூவில் இருக்கும் விசேஷமாகும். இந்த மலர்கள் கொடைக்கானலில் உள்ள ரோஜா பூங்காவில் பூத்து குலுங்குகிறது.

flower 1
flower 1

அங்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் குருவி பூக்களை கண்டு ரசித்தும் புகைப்படம் எடுத்தும் வருகின்றனர்.

முன்னர் மலைபகுதி முழுவதும் இருந்த மரங்கள் தற்போது குறைந்துள்ளாதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.