அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த புள்ளி மான்!

அடடே... அப்படியா? உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை
deer
deer

அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள எம்.சுப்புலாபுரம் பகுதியில் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளி மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது இறந்து கிடந்தது இரண்டு வயதுடைய ஆண் புள்ளிமான் ஆகும்.

இந்த வழியாக செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.