mcms 11 - 2026

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..

அடடே... அப்படியா? அரசியல் இந்தியா

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பிரதமர் மோடியின் பெயர் குறித்த சர்ச்சையில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து காலியாக உள்ள கேரளாவில் உள்ள அவரது வயநாடு நாடாளுமன்ற தொகுதி காலியாகி உள்ளது. காலியாக உள்ள தொகுதிகளுக்கு, 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் அறிவிப்பின் போது வயநாடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

mcms 11 - 2026

மேலும் பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சந்தோக்சிங் சவுத்ரி மறைவு, லட்சத்தீவு தேசியவாத காங்கிரஸ் எம்.பி., முகமது பைசலுக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை ஆகிய விவகாரத்தால், காலியாக இருக்கும் இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தியை களமிறக்க கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

தகுதி நீக்கத்திற்கு எதிராக ராகுல் தொடுக்கும் சட்ட போராட்டத்தில், அவருக்கு பின்னடைவு ஏற்பட்டு, தேர்தலில் போட்டியிடாத நிலை ஏற்பட்டால், வயநாடு தொகுதியில் பிரியங்காவை களமிறக்க, கேரள மாநில காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.