முதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்

அடடே... அப்படியா? புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்

waga border scene - 2026

பஞ்சாப்பில் உள்ள வாகா எல்லையில் கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இருநாட்டு ராணுவ வீரர்களின் செய்கைகள் அறுவெறுப்பாக உள்ளது என்று முன்னர் குற்றம் சாட்டியிருந்தார் யஷ்வந்த் சின்ஹா!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய- பாகிஸ்தான் எல்லையான வாகா பகுதியில் நாள்தோறும் இரு நாட்டு ராணுவ வீரர்களும் காலையில் தேசியக் கொடியை ஏற்றி மாலையில் அதனை இறக்கி வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியின் போது இரு நாட்டு ராணுவ வீரர்களும் தனிப்பட்ட ஸ்டைலில் மார்ச்சிங் செய்வார்கள். கடந்த 1959ம் ஆண்டு முதல் இந்த நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின்போது, இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு, முகத்தில் கோபம், ஆக்ரோஷம், வீரம், கடுங்கோபம் என முகக்குறிப்பை வெளிப்படுத்துவார்கள். இப்படி போர் மற்றும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனைக் காண இரு நாடுகளில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வாகா எல்லைக்கு வந்து செல்கின்றனர்.

தற்போது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத ஜெய்ஷ் இ மொஹம்மத்தின் பயங்கரவாதத் தாக்குதலில்  இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்த நிலையில் இவ்வாறு ராணுவ வீரர்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வெற்று சைகைகள் செய்வதை நிறுத்திக் கொண்டு, உண்மையாகவே செயலில் இறங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.