மேலதிகாரி ஒருவருக்கு, தன்னை துதிபாடுபவன், இட்ட வேலையை செய்பவன் யாரிடத்தில் ப்ரீதி? ஆச்சார்யாள் அருளுரை!

Published:

abinav vidhya theerthar

ஒருவனுக்கு இரண்டு வேலைக்காரர்கள் கூட இருந்தார்கள் ஒருவன் எஜமானனே எப்பொழுதும் துதி செய்து கொண்டிருப்பான் அவர் இடும் கட்டளையை நிறைவேற்ற மாட்டான்

மற்றொருவன் தனக்கு இட்ட வேலைகளைச் சிரத்தையுடன் செய்வான் அவன் தன் எஜமானனை உயர்ந்த ஸ்தானத்தில் தான் வைத்திருந்தான் நிஜமாக எஜமானருக்கு அவ்விருவரில் யார் இடத்தில் பிரியம் இருக்கும்.

நிச்சயம் இரண்டாவது வேலைக்காரனை தான் எஜமான் விரும்புவான் உண்மையான பக்தனும் இரண்டாவது வேலைக்காரர்கள் போல்தான் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை சாஸ்திரங்களில் கூறப்பட்ட கட்டளைகளையும் சிரத்தையுடன் நிறைவேற்றுவார்கள் தவிரவும் பலன்களை இறைவனுக்கு அர்ப்பணித்து தத்தமது காரியங்களை செய்து கொண்டு வருவான்.

இதனால் இறைவனின் அன்புடன் அவருடைய பரிபூரண அனுக்கிரகமும் கிடைக்கிறது. இறைவனின் அருளால் அவன் உள்ளம் தூய்மை அடைகிறது காலப்போக்கில் அவர்கள் இறை நிலையை உணர்ந்து மேன்மையடைகிறார்கள்.

ஒரு பெண்மணி இளம் பருவத்தில் இருந்து தன் பையன் இடத்தில் அதிக பாசம் வைத்திருந்தார் ஒரு நாள் காலையில் அவள் தூக்கத்திலிருந்து எழும்போது ஒற்றை தலைவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தனது கஷ்டங்களைப் பொருட்படுத்தாமல் குழந்தைக்காக நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்து முடித்தாள் அவள் சமைத்த சாதம் அதிகமாக வெந்துவிட்டதால் குழைந்து விட்டது அந்த சாதத்தை தள்ளி வைத்துவிட்டு வேறு அரிசியை எடுத்து சமைக்கத் தொடங்கினாள் இதை கவனித்த அவளது கணவன் இன்று உடல்நிலை சரியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறாய் அப்படி இருக்கும் பொழுது ஏன் நீ மேலும் உன்னை வருத்திக் கொள்கிறாய் நீ இப்பொழுது வடித்த சாதமே சாப்பிடும்படி தான் உள்ளது அதுவே போதும் என்று கூறினார்.

என் குழந்தைக்கு பிடித்தமானதை நான் செய்கிறேன் அவனது இன்பத்தை பார்த்தே நான் அவனுக்கு உணவு அளிக்க விரும்புகிறேன் குழைந்துபோன சாதத்தை பொறுத்தவரையில் நான் அதை சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பதிலளித்தாள் மனைவி.

தன் குழந்தையின் மேல் உள்ள அன்பினால் அப்பெண் தன்னால் அதிகபட்சமாக குழந்தைக்காக எவ்வளவு பாடுபட முடியுமோ அவ்வளவு பாடுபட்டாள். அவ்வாறே ஒரு கர்மயோகி இறைவனின் மேல் இருக்கும் பக்தியால் தனது கடமைகளை ஆற்றுவதில் தன்னுடைய அதிகபட்சமான செயல்திறனை காட்டுவதோடு அதிலிருந்து விலகியும் இருப்பான். செய்த வேலைகளை இறைவனுக்கு அர்ப்பணிப்பான்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img