தேர்வுக்கு தயார் ஆவது எவ்வாறு? ஆச்சார்யாள் அருளமுதம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
abinav vidhya theerthar

2 மாணவர்களுக்கு தேர்வுக்கு சென்றார்கள் கேள்விகள் கடினமாக இருந்ததால் நன்கு படித்தும் பதில்களை சரியாக எழுத முடியவில்லை.

அவற்றுள் சில கேள்விகள் அச்சடிக்கப்பட்ட பாடத்திட்டத்தின்படி கேட்கப்படவில்லை. மாணவர்களுள் ஒருவன் மோசமாகத் தான் எழுதி இருப்பதை நினைத்து மனமுடைந்து போனார் வீட்டிற்கு சென்று அவன் அடுத்த பரிட்சைக்காக படிக்க உட்கார்ந்த போது அன்றைய தினத்தையே எண்ணி எண்ணி அவன் மனம் வருத்தப்பட்டது அடுத்த நாள் பாடங்களில் அவனால் கவனம் செலுத்த முடியவில்லை.

கர்ம யோகத்தை பழகிக் கொண்டிருந்த மற்றொரு மாணவன் மன உளைச்சல் ஏதும் இன்றி காணப்பட்டதால் இதற்கு காரணம் அவன் தான் எழுதிய பதில்களையும் அதனால் வர கூடிய மதிப்பெண்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து விட்டதே ஆகும்.

வீடு திரும்பியதும் எந்த கவலையும் அவனை தொந்தரவு செய்யாததால் தான் அவனால் அடுத்த பரீட்சைக்கு தயார் செய்ய முடிகிறது.

krishnar

தேர்வுக்கு சென்ற முதல் மாணவன் கஷ்டமான கேள்வி பார்த்ததும் திகைத்து போனான் கர்மயோகி அதே கேள்வியை நிதானமாகப் படித்துப் பார்த்துவிட்டு மனம் கலங்காமல் தனக்கு தெரிந்த அளவிற்கு பதில் எழுதினார்.

கர்மயோகியைக் காட்டிலும் முதல் மாணவன் குறைவான மதிப்பெண்களை பெற்றதில் வியப்பேதும் இல்லை பலன்களை எதிர்பார்த்து காரியம் செய்பவனை விட கர்மயோகத்தின் திறமை மிக அதிகமாக இருக்கும் என்பதை இந்த உதாரணம் நமக்கு சொல்கிறது.

உனக்கு வகுக்கப்பட்ட கடமைகளை செய்து இறைவனுக்கு அர்ப்பணித்து இருப்பதே சாலச்சிறந்தது. இது புரியாமல் நீ சும்மா இருந்தால் உடலைப் பேணிக் காத்துக் கொள்வதற்குக் கூட இயலாமல் போய்விடும்.

இறைவனுக்கே என்று அர்ப்பணித்து செய்த செயல்களை தவிர மற்ற செயல்கள் யாவும் ஒருவனை வந்து அடைகிறது. குந்தியின் மகனே பற்றை ஒழித்து இறைவனுக்காக காரியங்கள் செய்யப்படும் போது பற்றில்லாமல் தன் கடமைகளைச் செய்யும் ஒருவன் மனத்தின் மூலம் மோட்சத்தை அடைகிறான் என்று பகவான் கீதையில் கர்மயோகத்தின் மேன்மையை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.