மௌனம் மூலம் கற்பித்தல்: ஆச்சாரியாள் அருளமுதம்!

Published:

IMG_20200725_120526_262

பாஸ்கலி பிரம்மத்தை அறிந்து கொள்ள வேண்டுமென்று விருப்பம் கொண்டான் அவன் முற்றும் உணர்ந்த ஞானியான பாத்வ முனிவரிடம் சென்று தயவுசெய்து பிரம்மத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள் என்று பிரார்த்தித்தான்.

மகரிஷி அமைதியாக இருந்தார். தனது விருப்பத்தை மறுபடியும் தெரிவித்தான் மவுனமாகவே இருந்தார். எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பேராவலால் மூன்றாவது முறையாக தயவுசெய்து பிரம்மத்தைப் பற்றி எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டான். நான் ஏற்கனவே உனக்கு கற்றுக் கொடுத்து விட்டேன் நீ தான் அதை புரிந்து கொள்ளவில்லை என்று கூறினார். மேலும் அவர் மௌனமே ஆத்மா என்றார்.

வேதத்தில் கூறப்பட்டுள்ள இக்கதையை சங்கர பகவத்பாதர் தமது பிரம்மசூத்திர பாஷ்யத்தில் எடுத்துச் சொல்லியிருக்கிறார். பிரம்மா தன் மனதால் சிருஷ்டித்த 4 புத்திரர்களான சனகர் சனந்தனர் முதலியவர்கள் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு பிரஜைகளை உண்டாக்குவதில் சிறிதளவும் பற்று இன்றி விளங்கினார்கள் வைராக்கியத்தின் எல்லையில் இருந்த அவர்கள் பிறபிறப்பை கொண்ட இந்த சம்சார சாகரத்தில் இருந்து விடுபட்டு ஆத்ம நிலையை அடைந்துவிட பெரிதும் முனைந்தார்கள்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.2 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

அவர்கள்பால் கொண்ட கருணையால் சிவபெருமான் நான்கு கைகளுடன் கூடிய தட்சிணா மூர்த்தியாக அவதரித்து இமய மலையில் இருந்த ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தார். பிரம்மானந்ததில் களித்தவராய் மௌனமாக தம் இருக்கையில் வைத்திருந்த தக்ஷிணாமூர்த்தியை நான்கு முனிவர்களும் அணுகினார்கள்.

பிறவிச் சக்கரத்தில் இருந்து மீள்வதற்கான வழியை காட்டி அருளும்படி தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பலவித சந்தேகங்களை தீர்த்து வைக்கும்படி தக்ஷிணாமூர்த்தி இடம் கேட்க அவர்கள் நினைத்தார்கள். தக்ஷிணாமூர்த்தியின் வடிவில் வந்த இறைவன் வாய் திறந்து எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தார்

அவருடைய மௌனத்தின் அபரிமிதமான சக்தியால் அவரின் பெரும் கருணையால் முனிவர்கள் நால்வரும் அத்தருணமே ஞானிகள் ஆகிவிட்டார்கள். அவர்களுடைய சந்தேகங்கள் யாவும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து பௌர்ணமி இரவில் இருட்டில் இருப்பதைப் போலவே அமாவாசை இரவிலும் இருக்கும். சொல்லப்போனால் இருட்டு இல்லாத இரவே இருக்க முடியாது. பௌர்ணமி இரவில் இருக்கும் இருட்டில் மக்களால் சாலையில் நடமாட முடியும் பல காரியங்களையும் அவர்களால் செய்ய முடியும் அவர்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்று விரும்பினால் அதற்கு சிறிது கஷ்டப்பட வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

அமாவாசை இரவில் இருட்டில் வானமும் மேகங்கள் சூழ்ந்திருந்தால் சாலைகளில் நடந்து செல்லவே மக்களால் முடியாது அப்படி இருக்கையில் இருட்டில் புத்தகம் படிப்பதற்கு சொல்லவே தேவையில்லை. சனகர் சனந்தனர்களுக்கு இருந்த ஞானமானது பௌர்ணமி இரவின் இருட்டை போலிருந்தது கிட்டத்தட்ட மற்ற எல்லா மக்களுடைய அஞ்ஞானமும் அமாவாசையில் இரவு இருட்டை போல் இருக்கின்றது.

தக்ஷிணாமூர்த்தி அணுகிய மிகத் தூய்மையான உள்ளம் கொண்ட அம்மகரிஷிகளைப் போலுள்ள சிஷ்யனின் லேசான ஞானத்தை விளக்குவதற்கு ஒரு ஞானியின் மௌனமே போதுமானது. கிழ்நிலையில் இருக்கும் சிஷ்யர்களின் அடர்ந்த அஞ்ஞானம் அவர்கள் தங்கள் குருவிடமிருந்து தத்துவத்தை நேரடியாகக் கற்றுக்கொள்ள வேண்டும்

Related articles

Recent articles

spot_img