திருப்பதியில் டிச.18 முதல் டைம் ஸ்லாட் முறை அமலாகிறது!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் சற்றுமுன் சென்னை

திருமலை திருப்பதி ஏழுமலையானை சர்வ தரிசனம் என இலவச தரிசன முறையில் தரிசிக்கதிருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைத்து வெள்ளிக்கிழமை தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி ஸ்ரீநிவாச ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஏழுமலையானை இலவச தரிசனம் (சர்வ தரிசனம்) மூலம் தரிசனம் செய்யும் பக்தர்கள் முக்கிய நாட்களிலும், விசேஷ நாட்களிலும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க வரும் 18ம் தேதி முதல் ‘டைம் ஸ்லாட்’ முறை சோதனை முறையில் அமல் படுத்தப்பட உள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர் தெரிவித்தது…

டைம் ஸ்லாட் முறைப்படி, சர்வ தரிசன முறையில் ஏழுமலையானை தரிசிக்க திருமலை வரும் பக்தர்களுக்கு வரும் 18ம் தேதி முதல் டோக்கன் முறை அமல் படுத்தப்படும். இதற்காக திருமலையில் 14 இடங்களில், 117 டோக்கன் விநியோக மையங்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதில் ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு இந்த டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். இவர்கள் திவ்ய தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக செல்ல அனுமதிக்கப்படுவர். ஆதார் அட்டை இல்லாத பக்தர்கள் சர்வ தரிசன காம்ப்ளக்ஸ் வழியாக அனுமதிக்கப்படுவர். 7 நாட்கள் வரை இந்த முறை சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்படும். பக்தர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இது நிரந்தரமாக்கவோ அல்லது நிறுத்துவதோ முடிவு செய்யப்படும்” என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.