இன்று பாவங்கள் நீங்கும் மோகினி ஏகாதசி சுப தினம்…

Published:

சித்திரை-வைகாசி  மாதம் ‍சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசி  திதியை மோகினி  ஏகாதசியாக‌ கொண்டாடுகின்றனர்.  இன்று மோகினி ஏகாதசி தினமாகும்.

சுய கட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை விளக்கும் வரூதினீ  ஏகாதசி விரத கதையைக்
கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்,” ஹே கிருஷ்ணா!,சித்திரை -வைகாசி
மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின்  பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான  விதிமுறை,இவற்றைப் பற்றி விரிவாக கூற வேண்டும்.” என்று வேண்டினான்.

ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்,” ஹே பாண்டு நந்தனா! மகரிஷி  வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கூறிய ஒரு புராதன கதையை உனக்கு
கூறுகிறேன்.கவனத்துடன் கேள் என்றார். ஒரு சமயம் ஸ்ரீ ராமர் மகரிஷி வசிஷ்டரிடம், குரு  தேவா!,ஜனக நந்தினி  ஸ்ரீ    சீதையின் பிரிவால் நான்  மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில்
ஆழ்த்தும் இத்துயரத்தை  நீக்குவது எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும்  அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும் அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதி முறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்.”என்றார்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.9 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

மகரிஷி வசிஷ்டர்,” ஸ்ரீ ராமா,மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ரதன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன்.உன் நாமத்தை  உச்சரித்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தை பெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு  கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன்.
சித்திரை- வைகாசி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல  பாபங்களும்,துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம்
என்னும் மாயையின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவர் என்றார்.

images 47 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img