வைத்தீஸ்வரன் கோவில் பங்குனி பிரம்மோற்சவ திருதேரோட்டம்..

Published:

IMG 20230402 WA0057 - 2026
#image_title

சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருள்மிகு தையல் நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு திருதேரோட்டம் நடைபெற்றது. அடுத்தடுத்து நான்கு தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் அருள்மிகு தையல்நாயகி உடனாகிய வைத்தியநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. நவகிரக ஸ்தலங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாக விளங்கும் இக்கோவில் முருகப்பெருமான் செல்வமுத்துக்குமாரசாமியாக தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

சித்தமருத்துவத்தின் தலைவரான தன்வந்திரி தனிச் சந்நிதியில் எழுந்தருளி உள்ளார். இக்கோவிலில் அமைந்துள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி கோவிலில் வழங்கப்படும் திருச்சாந்துருண்டை என்னும் பிரசாதத்தை உண்டால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம்.இவ்வளவு சிறப்பு மிக்க கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 27 ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 7 ஆம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் விழா துவங்கி நடைபெற்றது.விநாயகர்,செல்வ முத்துக்குமார சுவாமி, தையல் நாயகி அம்மன் சமேத வைத்தியநாத சுவாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு நான்கு தேர்கள் அடுத்தடுத்து நிலையில் இருந்து புறப்பட்டு வீதியுலா செல்கின்றது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.31 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

திருத்தேரோட்ட விழாவை வைத்தீஸ்வரன் கோவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள் வடம் படித்து துவக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு 4 தேர்களையும் வடம் பிடித்து தேர் இழுத்தனர். பிற்பகலுக்குப் பிறகு நான்கு தேர்களும் நிலையை வந்தடைந்தது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img