spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி... சுந்தரர் - சங்கிலியார் திருமணம்!

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்!

- Advertisement -

”தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ;இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சியதோ”….

”சுந்தரர் சங்கிலியார் திருமணம்”:28-2-18..”சென்னை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் உடனுறை படம்பக்க நாதர்,தியாகராஜர் திருக்கோவில்”.

ஆலயதொடர்புக்கு:04425733703,9444479057

முன்ஜென்மத்தில், சுந்தரர் ஈசனுக்கு அருகில் இருந்து தொண்டு செய்து வந்தார்.அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில்,அங்கிருந்த இரண்டு பெண்கள்மீது காதல் கொண்டார்.அந்த இரண்டு பெண்களும் அம்பாளின் பணிப் பெண்கள்.அவர்களும் அவரை விரும்பினர்.

இதன் காரணமாக,அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் சென்னை திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர்.ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார்; காதல் கொண்டார்.

சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம்,அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார்.திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார்.சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர் அவர் மீது காதல் கொண்டார்.சங்கிலியாரும் சுந்தரர் மேல் காதல் கொண்டார்.ஆனால் அவரால் வெளிப்படுத்த முடியவில்லை.

சங்கிலியாரின் சிவசேவையைக் கண்ட சுந்தரர்,தனக்கு அவரை மணம் முடித்துத் தரும்படி சிவனிடம் வேண்டினார்.அதன்படி சங்கிலி நாச்சியாரின் கனவில் ஈசன் தோன்றி சுந்தரரை மணந்து கொள்ளும்படி கூறினார். சுந்தரர் ஏற்கனவே திருவாரூரில் பரவை நாச்சியாரை திருமணம் செய்து கொண்டிருந்தார்.ஆகையால் என்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரே என்று சங்கிலி நாச்சியார் கூறினார். ஈசன் இதை சுந்தரரிடம் கூறினார்.

அதற்கு சுந்தரர் ஈசனிடம், “ஊர் ஊராகச் சென்று ஈசனைப் பாடும் நான்,ஒரே ஊரில் இருப்பது இயலாத காரியம். அந்தப் பெண்ணைப் பிரியாமல் என்னால் இருக்கமுடியாது.அதே சமயம் அவளை நான் மணக்கவும் வேண்டும்.

ஈசன் முன் சங்கிலி நாச்சியாரிடம் உன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்தால் அதை மீற முடியாது.ஆகவே சத்தியம் செய்யும் சமயத்தில் சந்நதியில் நீங்கள் இல்லாமல் மகிழ மரத்தடியில் ஒளிந்து கொள்ளும்’’ என்றார் ஈசனிடம் சுந்தரர்.

இதனை ஈசன் சங்கிலி நாச்சியாரிடம் தெரிவித்தார். எனவே திருமணம் நடக்கும் சமயம் சங்கிலி நாச்சியார் சுந்தரரிடம் ‘‘மானிடராகிய நாம் தெய்வ சந்நிதானத்தில் சத்தியம் செய்வது முறையல்ல’’ என்று கூறி மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சுந்தரரும் வேறு வழியின்றி மகிழ மரத்தடியில் ஒளிந்து இருந்த ஈசனை மூன்று முறை வலம் வந்து,“என்றும் உன்னைப் பிரிய மாட்டேன்” என்று சத்தியம் செய்து சங்கிலி நாச்சியாரை மணந்து கொண்டார்.

இங்கு நெஞ்சின் ஒரு ஓரமாய் சுந்தரரை கண்டதும் முன்ஜென்ம பந்தத்தால் மனதுள் காதல் கொண்டு,அதை வெளிக் காட்டமுடியாமல் மின்னும் பைங்கிளி சங்கிலி நாச்சியார் தவிக்க, இதனைக்கண்ட ஈசன் சுந்தரர் மூலம் சுந்தரர் சங்கிலியார் காதலை வெளிப்பட வைத்தார்.

முன்ஜென்ம பந்தத்தால் அல்லவா,ஊரில் ஆயிரம் பெண்கள் இருந்தாலும் சுந்தரரின் நெஞ்சுக்குள் சங்கிலியாரைக் கண்டதும் காதல் பாய்ந்து சங்கிலி நாச்சியாரின் மனக் கதவை ஈசன் அருளால் திறக்கவைத்தது.அதுமட்டுமல்ல மின்னும் பைங்கிளியான சங்கிலிநாச்சியார் இனி ஈசன் அருளால் தமக்கு தஞ்சம் என சுந்தரரின் தோளில், மஞ்சம் என்றிவன் தோளில் துஞ்சினாள்.

ஆம்!காதலி தஞ்சம் என மஞ்சமாய் கருதி காதலன் தோள் மேல் சாய்ந்தால்.எப்படி இருக்கும்.?!.ஆசை காதலி சங்கிலி தன் சுந்தரனின் அரவணைப்பில்..நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது அல்லவா..

”அன்பே சிவம்”…சிவாய நம….63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம் திருவொற்றியூர்.ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன், பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர்,27 நட்சத்திரங்கள் வழிபட்ட தலம்.

சம்பந்தர்,நாவுக்கரசர்,சுந்தரர்,மாணிக்கவாசகர்,பட்டினத்தார்,கம்பர், காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், வள்ளலார், மறைமலையடிகளார் பாடி உள்ளனர்.உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி பாம்பு ஈசனை வேண்டி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் இது.

படம்பக்க நாதர் புற்று வடிவம் , கவச திருமேனி , கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.அப்போது சாம்பிராணி தைலம் சாற்றப்படுகிறது.அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம் இது.பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி தருகிறார்.நுனிக்கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.

நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம் இது.கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம் இது.கண்ணகியே இங்கு வட்டப்பாறை அம்மன்.

வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த தலம். இத்தல வட்டப்பாறை அம்பிகையின் அருளால்தான் கம்பர் தமது கம்ப இராமாயணத்தை எழுதி அருளினார் என்கிறார்கள்.

மாந்தாதா என்ற மன்னன் திருக்கோவில்களின் கட்டளையைக் குறைத்து எழுதினான். அந்த ஏட்டில் இறைவன் ‘ஒற்றியூர் நீங்கலாக’ என்று எழுதினான். அதனால் எழுத்தறியும் பெருமாள் என்னும் நாமமும் கொண்டனன் இத்தல ஈசன்.பூமியில் பிரளயம் ஏற்பட்ட சமயம் சிவபெருமான் வெப்பம் உண்டாக்கி அவ்வெப்பத்தால் பிரளய நீரை ஒற்றி எடுத்தார்.

அதனால் இத்தலத்திற்கு ஒற்றியூர் எனப் பெயர்.வெப்பத்தை இறைவன் ஒற்றிக் கொண்டதால் இறைவன் திருநாமம் ஒற்றீசர்.பிரளயத்திற்குப் பின் தோன்றிய முதல் சுயம்பு சிவலிங்கம் ஆனதால் இத்தல இறைவன் ஆதிபுரீஸ்வரர் என்றும்,வாசுகி பாம்பை தன்னுள் அடக்கிக் கொண்டதால் படம்பக்கநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.இத்தல நடராஜர் சன்னதியின் வெளிப்புற வடக்கு சுவரில் ஏகபாதமூர்த்தி சிற்பம் அமைந்துள்ளது. சிவபெருமான் ஒரே காலுடன் நின்ற நிலையில் இருக்க, அவரது வலப்பக்கம் பிரம்மாவும், இடப்பக்கம் விஷ்ணுவும் உடன் இணைந்து தோன்றுவது ஏகபாதமூர்த்தி வடிவம் ஆகும்.

பிரளய காலங்களில் இவர் மட்டுமே அழியாமல் இருப்பவர் என ஆகமங்களும், வேதங்களும் கூறுகின்றன. “ஒற்றியூரும் ஒளிமதி பாம்பினை ஒற்றியூரும் பாம்பும் அதனையே ஒற்றியூர் ஒருசடை வைத்தவன் ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே”. ‘”உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே”[அப்பர்]…”நானேயோ தவம் செய்தேன்? `சிவாய நம’ எனப் பெற்றேன்?”.

“வர இருக்கும் பிறவியிலும் வாழ்த்திடுவேன் நின் அருளை”.”நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண்”.”நாயேனை நாளும் நல்லவனாக்க,ஓயாமல் ஒழியாமல் உன்னருள் தந்தாய்”…

“நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்”…

கட்டுரையாக்கம்:

அன்பன். சிவ.அ.விஜய் பெரியசுவாமி,
9787443462

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe