“பெரியவாளின் வாக்கு பலிதம்”

ஆன்மிகம்

246400_479182102136836_1433845875_n தொகுத்தவர்-அழகர் நம்பி. தட்டச்சு-வரகூரான் நாராயணன். சென்னையில் பெசன்ட் நகரில் அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த விஷயத்தை காஞ்சிப் பெரியவாளிடம் தெரிவிப்பதற்காகச் சென்றார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். பெரியவாளை தரிசித்தபின் “அஷ்ட லக்ஷ்மி கோவிலின் திருப்பணிகள் முடிவடைந்து விட்டன” என்று கூறினார் ஆச்சாரியார். “பெருமாளை பிரதிஷ்டை செய்தாயிற்றா?” என்று கேட்டார்கள் ஸ்வாமிகள். “இல்லையே பெருமாள் சிலை பிரதிஷ்டை செய்யவில்லையே” என்றார். பெருமாள் விக்கிரஹத்தை பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவு பிறப்பித்தார்கள் பெரியவா. ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படியே பெருமாள் சிலை வடிக்கப்பட்டது. அச்சிலையை பெரியவாளின் பார்வைக்காக எடுத்துச் சென்றார் நரசிம்மாச்சாரி. ஸ்வாமிகள் விக்கிரஹத்தைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம், ஜட்ஜ் கைலாசம் தன் மனைவியுடன் வந்து ஸ்வாமிகளை நமஸ்கரித்தார். “இவர் சீக்கிரமே சுப்ரீம் கோர்ட் ஜட்ஜாகப் போகிறார்” என்று நரசிம்மாச்சாரிக்கு அறிமுகம் செய்தார்கள். ஸ்வாமிகளின் வாக்கைக் கேட்ட ஜட்ஜ் தம்பதி அதனை அருள் வாக்காகவே கொண்டார்கள். பெரியவாளின் வாக்கு பலித்து விட்டது. ஒரே வாரத்தில் கைலாசம் சுப்ரீம் கோர்ட்டின் ஜட்ஜாக உத்தரவும் வந்தது. உற்ற பொருள் கொண்டு உறுபொருள் காண்பார் வரும் பொருள் உரைப்பார் இந்த மண்ணுயிர்க்கன்பர்!’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.