சபரிமலை நடை மூடல்! நித்திரை விழித்து தீர்ப்பளிப்பான் ஐயப்பன்… கதறிய பக்தர்கள்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
sabarimala natai closed2 - 2026

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. மகர ஜோதி நிறைவடைந்து, நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகளும் நிறைவு பெற்ற நிலையில் இன்று காலை கோயில் நடை சாத்தப்பட்டது. அடுத்து, மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும்.

இந்த முறை பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவில் போராட்டங்களுக்கு மத்தியில் சபரிமலை நடை சாத்தப்பட்டது சுவாமி ஐயப்பன் தன்னைக் காண யார் வரவேண்டும் வரக்கூடாது என்று தீர்மானிப்பான் என்றும், இதைத் தீர்மானிப்பது திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு அல்லது கேரள அரசு அல்ல என்றும் பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்

sabarimala natai closed3 - 2026

இந்த முறை உச்ச நீதிமன்றம் சபரிமலை விவகாரம் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை அல்ல என்று கருதியது. இத்தனைக்கும் 4 பேரது உயிர்கள் பறிபோயிருக்கின்றன! மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. இருப்பினும் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! மக்களின் உயிர்களையும் உணர்வுகளையும் விட உச்ச நீதிமன்றம் தங்களது எழுதிவைத்த சட்டம் நீதியை பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி இருப்பதை ஒரு சாதாரண பிரஜையாக தங்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை என்று உள்ளம் குமுறுகிறார்கள் பக்தர்கள்!

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

நான்கு பேரது உயிர்கள் பறி போன பிறகும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு பிறகும் பலரை கம்யூனிசவாதிகள் அடித்துத் துவைத்த பிறகும், மாநிலத்திலுள்ள ஹிந்துக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியும் கூட, உச்ச நீதிமன்றம் ஏதோ இரண்டு பெண்கள் சபரிமலைக்கு செல்வதையும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதையும் முக்கியமான விஷயமாக நினைத்துக் கொண்டிருப்பது வெட்கக்கேடான விஷயம் என்றே இம்முறை சபரி பீடத்தைக் காண வந்த பக்தர்கள் கூறினர்.

sabarimala natai closed1 - 2026

இருப்பினும், இந்த அக்கிரமங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் கண் விழிப்பார் என்றும் இந்தச் சிக்கல்களுக்கு அவரே தீர்ப்பினை அளிப்பார் என்றும், நீதிபதியாக நின்று தீர்ப்பு கொடுப்பார் என்றும் சபரிமலை பக்தர்கள் உள்ளம் குமுறினர்.

sabarimala natai closed4 - 2026

சபரிமலை ஐயப்பன் தர்மசாஸ்தா நல்லவர்களுக்கு நல்லவர். பக்தர்களுக்கு தீங்கிழைப்பவரை அச்சுறுத்தும் வகையில் தண்டனை தருபவர் என்று பக்தர்கள் உறுதிபடக் கூறினர். அந்த நம்பிக்கை அடுத்த நடை திறப்பின்போது வீண்போகாது என்றே நடை அடைக்கும் நாளில் அன்பர்கள் கூறித் திரும்பினர்.

ALSO READ:  புதிய விடியலுக்கு அச்சாரம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.