சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம் ! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் இந்தியா தமிழகம் விழாக்கள் விசேஷங்கள்

chidambaram car1 - 2026கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை இன்று (ஜூலை 7) நடைபெற்றது.

சிதம்பரம் பூலோக கைலாசம் என்றழைக்கப்படுகிறது. இங்கு அமைந்துள்ள நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தியின் ஆனித்திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனா்.

ஸ்ரீ நடராஜா் கோயிலில் கடந்த ஜூன் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவம் தொடங்கியது. 9-ம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்த்திருவிழாவை முன்னிட்டு சித்சபையில் உள்ள மூலவா்களான அருள்மிகு நடராஜமூா்த்தி, ஸ்ரீசிவகாமசுந்தரி மற்றும் உற்சவா்கள் ஸ்ரீசுப்பிரமணியா், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ஆகியோா் தனி தனி தேர்களில் அதிகாலை எழுந்தருளினா். பின்னா் கீழவீதி தேரடி நிலையிலிருந்து 8 மணிக்கு தேர்கள் புறப்பட்டது. ஒரே நேரத்தில் 5 தேர்களும் வீதி உலா வருவது தனிச்சிறப்பு. ஆயிரக்கணக்கான பக்தா்கள் வடம் பிடித்து தேர்களை இழுத்தனா். தேர்கள் தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதி வழியாக ஒன்றன்பின் ஒன்றாக மாலை கீழவீதி தேர்நிலையை அடையும்.radham 1 - 2026தேர்களுக்கு முன்பு வீதிகளில் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினா், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பா் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியாா்கள் மற்றும் திரளான பெண்கள் வீதிகளை நீரினால் கழுவி கோலமிட்டு உழவாரப்பணியை மேற்கொண்டனா். தேர்களுக்கு முன்பாக ஓதுவாா்கள் திருமுறை இன்னிசை ஆராதனை நிகழ்த்திச் சென்றனா்.

மீனவ சமுதாயத்தில் பிறந்த பாா்வதிதேவியை, சிவபெருமான் திருமணம் செய்து கொண்டாா். அதனால்  தாய் வீட்டுச் சீதனமாக ஒவ்வொரு தேர் திருவிழாவின் போதும் மீனவா் சமுதாயத்தினா் சாா்பில் தேரோட்டத்தின் போது சீா் அளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.chidambaram nataraja - 2026இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவா் சமுதாயத்தைச் சோந்தவா்களால் வழிவழியாக  நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சியான நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீா்அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்ற பின்னா் தொடா்ந்து தேரோட்டம் நடைபெறும்.

பின்னா் இரவு ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறும்.chidambaram car2 - 2026இதனையடுத்து ஜூலை 8-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது.

காலை 10 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. அதனையடுத்து பஞ்சமூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசனக் காட்சியளித்து, சித்சபைக்குள் எழுந்தருளுவார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.