‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’

‘வினோதமான ஐடியாக்கள் எல்லாம் பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்!’
 
சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.2a2e8509fd23bfc926c95dc57ee8f945 1 - 2026
 
(ஒரு மறுபதிவு)
 
வயதான தம்பதிகள், மனம் உடைந்து
போயிருந்தார்கள். பெரியவாளுக்கு வந்தனம் செய்யும் போதெல்லாம் கண்களில் கண்ணீர் துளிர்க்கும்.
 
பெரியவாள் மௌனம் மேற்கொண்டிருந்த சமயம்
காஞ்சீபுரத்திலேயே தங்கி பெரியவாளிடம் பேசி
விட்டுத் தான் போவது என்று தீர்மானித்துக்
கொண்டிருந்தார்கள் போலிருக்கிறது.
 
மூன்றாவது நாள்,அவர்கள் கண்களில் கண்ணீரைக்
கண்டதும், பெரியவாளின் மனம் உருகிவிட்டது.
அவர்கள் இருவரையும் அருகில் அழைத்து
உட்காரச் சொன்னார்கள். அவர்களுக்காக
மௌனத்தைக் கைவிட்டார்கள்.
 
“ஒரே பையன் மூணு வருஷமாக அமெரிக்காவில்
இருக்கான். எங்களிடம் கொள்ளை ஆசை…”
 
“அப்புறம் என்ன?”
 
“இப்போ லீவில் வந்திருக்கான். ஒரு வெள்ளைக்காரியோடு கூட…! அவனுக்கு இன்னும் கல்யாணம் ஆகல்லே.”
 
“அந்த வெள்ளக்காரியைக் கல்யாணம்
பண்ணிக்க போறானாமா?”
 
“இல்லை என்கிறான். அந்த மார்கரெட் ரொம்ப
உயர்ந்த சிந்தனை உடையவள். இந்தியப் பண்பாடு,
கலாசாரம்,சமயச் சடங்குகள்,ஆசாரிய புருஷர்கள்,
புண்ணிய நதிகள், பெரிய கோவில்கள்
எல்லாவற்றைப்பற்றியும் நிறையத் தெரிந்து
கொண்டிருக்கிறாள். நேரில் பார்க்க வேண்டும்
என்ற ஆர்வத்தால், கொஞ்சம்,கொஞ்சமாகப்
பணம் சேர்த்துக் கொண்டு சிக்கனமாக
வந்திருக்கிறாள். ஒரு மகானிடம் தத்துவோபதேசம்
பெறவேண்டும் என்று ஆசை என்று சொல்கிறான்.”
 
“அப்படியானால் ஏன் கவலைப்படுகிறீர்கள்?”
 
முதியவர்களிடம் தயக்கம்.
“அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை;
நம்பாமலும் இருக்க முடியவில்லை…
பெரியவாள் அனுக்கிரகத்திலே….”
 
“சரி,சரி, உன் பையன் ரொம்ப நல்லவன்.
சொன்னால், கேட்பான். கேரளாவில் ஒரு ஆசிரமம்
இருக்கு. அங்கே கிருஷ்ணமேனன் என்று ஒரு
சந்யாசி இருக்கிறார்.ரொம்ப இங்கிலீஷ் படிச்சவர்.
மார்கரெட் மாதிரி இங்கே வருகிற வெளிநாட்டுக்காரர் எல்லாரும் அங்கே போய்த் தங்குவதுதான் வழக்கம். அந்த ஆசிரமத்துக்கு இவளையும் அனுப்பி விடச் சொல்லு. அவள் அங்கே போய், ஒரு மூணு மாசம், இங்கிலீஷ் கீதை, இங்கிலீஷ் பிரும்ம சூத்ரம், இங்கிலீஷ் அத்வைதம் எல்லாம் படிக்கட்டும்…”
 
அவ்வாறு நடந்தது. கேரள ஆசிரமத்துக்குச்
சென்றவள், மார்க்கம் கெட்டுப்போகாமல்,
செம்மையான ஞானம் பெற்று ஊருக்குப்
போய்ச் சேர்ந்தாள்.
 
இம்மாதிரி வினோதமான ஐடியாக்கள் எல்லாம்
பெரியவாளுக்கு மட்டும் தான் ஸ்புரிக்கும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories