“காலே குர்யாத் ஸந்த்யாம்”

ஆன்மிகச் செய்திகள்

“காலே குர்யாத் ஸந்த்யாம்” சொன்னவர்-எஸ்.பஞ்சாபகேச சாஸ்திரிகள். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்

10482143_599228513527816_46027082804070919_n
பிற்பகலில் தொடங்கிய ஒரு மாநாடு.
கனஜோராய் நடந்து கொண்டிருந்தது.
 
சூரியன் மலைவாயிலில் இறங்கத் தொடங்கியிருந்தான்.
 
சந்தியாவந்தனம் மாநாடு முடிந்து தான்.
சந்தியாவந்தனம் செய்யலாம் என்றால்,
இரவு ஒன்பது மணிக்குத்தான் செய்யலாம்.
 
………………காலே குர்யாத் ஸந்த்யாம்……………………
 
என் மனம் தவிக்க ஆரம்பித்தது. அரங்கத்தில்
பெரியவாளுக்கு அருகில் உட்கார்ந்திருந்தேன்.
நடுவில் எழுந்து செல்வது சரியாகப் படவில்லை.
 
பெரியவாளின் தலைமட்டும் சற்றே திரும்பினாற்
போலிருந்தது. கண்கள் என்னைப் பார்த்தன.
பிறர் அறியாவண்ணம், வலதுகையை ஆசமனம்
செய்வது போல் குழித்து, புருவங்களை உயர்த்தி,
எனக்கு அனுமதி கொடுத்தார்கள்.
 
நித்தியகர்மானுஷ்டானங்களுக்கு இடையூறு
இல்லாமல், நிகழ்ச்சிகளைத் திட்டமிடலாமே?- என்று அப்போது தோன்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.