images 16 - 2026

திருமலையில் பக்தர்கள் கூட்டம்..

ஆலயங்கள்

பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் திருமலை ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை 75 ஆயிரத்து 345 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதில் 36 ஆயிரத்து 91 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ4.52 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். மேலும், 26 அறைகளில் பக்தர்கள் சுமார் 9 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்றும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் தரிசனத்திற்கு காத்திருக்கும் நேரம் அதிகரித்தது.இன்றும் அதிகாலை முதலே திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

images 16 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.