திருக்குறுங்குடியில் தை தெப்போற்சவம்

Published:

images 2023 02 06T200228.985 - 2026

பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் பிரபலமாக நடைபெறும் தை தெப்போற்சவம் நேற்றும் இன்றும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடியில் ஐந்து சன்னதிகளில் எம்பெருமான் கோயில் கொண்டிருக்கிறார்.

ஊருக்குள் அமைந்துள்ள பெரிய கோயிலில் நின்ற கோலத்தில் சுவாமி அழகிய நம்பிராயர், பிரகாரத்தில் தனிச்சன்னதிகளில் அமர்ந்த கோலத்தில் வீற்றிருந்த நம்பி, சயனக் கோலத்தில் பள்ளிகொண்ட நம்பி, கோயிலுக்கு வெளியே நம்பியாற்றின் கரையில் திருப்பாற்கடல் நம்பி, மேற்குதொடர்ச்சி மலை மீது திருமலைநம்பி ஆகிய ஐந்து சன்னதிகளில் எம்பெருமான் சேவை சாதிக்கிறார்.

பெரிய கோயில் தெப்பக்குளத்தில் ஆண்டுதோறும் தை பூசத்தன்றும், அதற்கு மறுநாளும் இரு நாட்கள் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இவ்விழாவில் நேற்று தைப்பூச நாளில் இரவு 7 மணிக்கு சுவாமி அழகிய நம்பிராயரும், 2-ம் நாளான இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு சுவாமி திருமலை நம்பியும் தெப்ப உற்சவம் கண்டருளினர்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.15 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இந்த விழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திராளான பக்தர்கள் பங்கேற்றனர்.

images 2023 02 06T200748.483 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img