நாங்கள் சந்தோஷமாக இருக்க நீதான் தடை! கள்ளத் தொடர்பில் இருந்த கணவன் சொன்னதும் மனைவியின் விபரீத முடிவு!

கிரைம் நியூஸ் தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
sus - 2026

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பத்தை சேர்ந்தவர் அருள். 38 வயதாகிறது. காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் வேலை பார்த்து வருகிறார். பண்ருட்டியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் இவருக்கு 4 மாசத்துக்கு முன்புதான் கல்யாணம் ஆனது. ராஜேஸ்வரி வயது 30!

சென்னை மயிலாப்பூர் போலீஸ் குவார்ட்டஸில் குடியிருந்து வருகிறார்கள். இந்நிலையில், ராஜேஸ்வரி வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம்பக்கத்தினர் இதை பற்றி காவல்துறைக்கு தகவல் தந்தனர். ராஜேஸ்வரியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் இது சம்பந்தமான விசாரணையில் இறங்கினர்.

இந்த சமயத்தில், ராஜேஸ்வரியின் தம்பி சரவணன், பட்டினப்பாக்கம் காவல்துறையில் புகார் ஒன்றை தந்துள்ளார். அந்த மனுவில், ” என் அக்கா கடந்த 20-ந்தேதி என்னிடம் செல்போனில் பேசினார்.

அப்போது, கணவரும் அவரது அண்ணி வெண்ணிலாவும் ‘நாங்கள் சந்தோஷமாக இருக்க நீதான் தடையாய் இருக்கிறே.. என் அண்ணி எவ்ளோ அழகா இருக்காங்க பாரு. முதல்ல வீட்டை விட்டு வெளியே போ, அல்லது செத்து போய்ட்டால், எங்களுக்கே எல்லா சொத்தும் கிடைக்கும்” என்று தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறி அழுதார்.

மேலும் தன் அண்ணியின் அழகை காட்ட, செல்போனில் உள்ள ஆபாச படங்களையும் கணவர் காட்டுகிறார், தினமும் சித்ரவதை செய்கிறார் என்று அக்கா கூறினார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

இதை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து அக்காவை பார்க்க ஊருக்கு வந்து கொண்டிருந்தோம். பாதி வழியிலேயே என் அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. என் அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த புகார் உண்மையானதா என்ற விசாரணையில் பட்டினப்பாக்கம் காவல்துறையினர் இறங்கி உள்ளனர். கல்யாணம் ஆகி 4 மாசத்தில் இளம்பெண் உயிரிழந்ததால் ஆர்டிஓ விசாரணையும் நடக்கிறது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.