திருமாவளவனுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்!

தமிழகம் பொது தகவல்கள்
thol thiruma

இந்தியா-சீனா இடையே கடந்த சில வாரமாக எல்லைப் பிரச்சினை வலுவடைந்துள்ளது. சீன ராணுவத்தினர் எல்லையில் அத்து மீறுகிறார்கள் என இந்தியா குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது.

நேற்று முன்தினம் அதிபர் டிரம்ப் இந்தியா எல்லை பிரச்சனையில் மோடி கவலையில் இருப்பதாக பேட்டி கொடுத்தார். இந்த பேட்டியின் மூலம் மோடி இந்தியா அமெரிக்காவுடனான நட்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இதைப்பற்றி விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து திருமாவளவன் போட்ட ட்விட்டர் பதிவில் “டொனால்ட் ட்ரம்ப் சம்மன் இல்லாமலே ஆஜராகத் துடிக்கிறார்.

பாகிஸ்தானோடு உரசல், சீனாவோடு சிக்கல் வரும்போதெல்லாம் பஞ்சாயத்துபண்ண ‘நான்ரெடி நீங்கரெடியா’என்கிறார் ? அவர் மோடிக்குஆதரவாகப் பேசுகிறாரா? கிண்டல் பண்ணுகிறாரா? இந்திய-சீன எல்லையிலோ நம்படையினர் ‘திரும்பிபோ’ என பதாகை பிடிக்கின்றனர் ! என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த மீம்ஸ் மற்றும் கருத்து பாஜகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவனின் இந்த ட்வீட்டை ரீட்வீட் செய்து பாஜக ஆதரவாளரான காயத்ரி ரகுராம், “எவ்வளவு அசிங்கமாக உள்ளது ! உங்களுக்கு மீம்ஸ் போடுவது தவிர வேற வேலை இல்லையா. ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு இந்திய ராணுவ வீரர்கள் பற்றி இப்படி பேசுவதா.. உருப்படியான வேலை பாருங்கள். என காயத்ரி ரகுராம் பதில் ட்வீட் போட்டுள்ளார். காயத்ரி ரகுராம் அடிக்கடி திருமாவளவனின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்து எதிர்ப்பினை பலமாக பதிவிட்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.