13 வயது சிறுமி 8 மாத கர்ப்பம்.. அதிர்ச்சியில் தாய்! உறவுக்காரர் என்று வந்தவர் வைத்த உறவு!

கிரைம் நியூஸ் தமிழகம்
pragnant

வேலூர் அடுத்த சதுப்பேரி பகுதியை சேர்ந்தவர் எட்வின் வயது 30. இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இப்படி இருக்க அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார சிறுமியான 9ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கி உள்ளார்.

எட்வின் அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமான வைத்திருந்துள்ளார். அதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை .

இந்நிலையில் சிறுமி கடுமையான வயிற்று வலியால் சில நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாய் அந்த சிறுமியை அடுக்கம்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு ஆழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற போது சிறுமியை பரிசோதனை மாருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருக்கும் அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ந்த தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அதன் பின் சிறுமி நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களுடன் தகவல் கொடுத்தனர். அதன் பின் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டு எட்வீனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.