விவசாயி வீட்டில் வைத்திருந்த ரூ.25,000 பணமும் 35 பவுனும் கொள்ளை!

கிரைம் நியூஸ் தமிழகம்
robbery

வீரகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் அரசகுமார் இவர் விவசாயம் செய்து வருகிறார் ,இவருடைய மனைவி திவ்யா மேலும் இவருடைய மாமியார் சுசீலா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது மாமியார் சுசிலா வீட்டிற்கு அரசகுமார் சென்றுள்ளார்.

மேலும் நள்ளிரவு சுசிலா வீட்டு வராண்டாவில் உள்ளே இருந்து ஒரு பக்கம் கதவை பூட்டி விட்டு உறங்கிக் கொண்டிருந்தார் அப்போது திவ்யா வீட்டின் உள்ளே கதவை மூடிவிட்டு ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் புதன்கிழமை காலை எழுந்து வீட்டில் இரண்டு கதவுகளும் திருந்திருந்தை பார்த்து இரண்டு பேரும் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் வீட்டில் வைத்திருந்த 35 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கப்பணம் வங்கி கார்டு வங்கி புத்தகம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது,

இதனைத் தொடர்ந்து விவசாய அரசகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.