காதலிக்க மறுத்த சிறுமி! கத்தியால் குத்திய இளைஞன் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை!

கிரைம் நியூஸ் தமிழகம்
ep-sus

திருவண்ணாமலையில் 17 வயது சிறுமி காதலிக்க மறுத்தால் ஆத்திரமடைந்த நபர் சிறுமையை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு மின்கம்பத்தில் ஏறி படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ. நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பிரஷாந்த். எலக்ட்ரீசியனான இவர் அந்த பகுதியில் உள்ள 17 வயது சிறுமியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை சிறுமியிடம் காதலை வெளிப்படுத்தியும் சிறுமி அதை தொடர்ந்து மறுத்து வந்துள்ளார். இதனால் சிறுமியை தொடர்ந்து பிரஷாந்த் மிரட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று சிறுமி வயலுக்கு சென்று வேலை செய்து விட்டு களை வேட்டியுடன் வீட்டுக்கு திரும்பியுள்ளார். அந்த வேளையில் வந்த பிரஷாந்த் மீண்டும் காதலை ஏற்குமாறு சிறுமியிடம் மல்லுக்கட்டியுள்ளார்.

சிறுமி மறுக்கவே அவளது கையில் இருந்த களை வேட்டியை பிடுங்கி அவரை கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் தான் மறைத்து வைத்திருந்த கூறமையான ஆயுதங்களால் சிறுமியின் முதுகில் பலமுறை குத்தியுள்ளார். இரத்த வெள்ளத்தில் சிறுமி கத்திக்கொண்டே மயங்கி விழுந்துள்ளார்.

அவளது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவும் பிரஷாந்த் அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியில் படுத்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். அதிர்ச்சியடைந்த பொது மக்கள் உடனே மின் ஊழியர்களை அழைத்து இணைப்பை துண்டித்தனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் சிறுமிக்கு எத்தனை நாட்களாக தொல்லை இருந்தது, வேறு ஏதேனும் பிரச்சனை நடந்துள்ளதா, சம்பவம் கொடூரமாகும் முன்பு என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.