மளிகைக்கடையில் இலவச பொருள் கேட்டு அரிவாளால் மிரட்டல்! திமுக பிரமுகர் மகன் கைது!

கிரைம் நியூஸ் தமிழகம் லைஃப் ஸ்டைல்
imayan

கடலூர் அருகே கடனுக்கு பொருள் கேட்டு அரிவாள் காட்டி மிரட்டிய நபரின் வீடியோ காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகரில் ராஜா என்பவர் நடத்தி வரும் மளிகைக்கடையில், அதே பகுதியை சேர்ந்த இமயம் என்பவர் பொருள் வாங்கி வந்துள்ளார்.

நீண்ட நாட்களாக காசு கொடுக்காமலே வாங்கி வந்த அவர், நேற்று முன் தினம் கடைக்கு வந்து பொருள் கேட்டு கடைகாரரை மிரட்டியுள்ளார். ஆனால் கடன் கொடுக்க ராஜா மறுப்பு தெரிவித்ததால், இமயன் தான் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டியதோடு, அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி விட்டு ராஜாவை அடிக்க முயன்றுள்ளார். இதனால் கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.

DMK-theft

இமயன் கத்தியை காட்டி மிரட்டியது முழுவதுமாக அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி காவல்துறையினரின் கவனத்துக்கு சென்றுள்ளது.

அதே போல, கடை உரிமையாளர் ராஜாவும் சிசிடிவி காட்சியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார், இமயனை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

imayan-dmk

இது போன்று மக்களை அச்சுறுத்தும் விபரீதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்னர். மேலும், கடையில் அரிவாள் காட்டி மிரட்டிய இமயன் திமுக நிர்வாகியின் மகன் என தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.