சைலன்ட் மோடில் காணாமல் போன மொபைலை ரிங் செய்ய வைப்பது எப்படி.?

Published:

woman with cell phone - 2026

சைலன்ட் மோடில் காணாமல் போன உங்களது மொபைல் போனை ரிங் செய்ய வைப்பது எப்படி.? என்பது குறித்து ஒரு சிறிய விளக்கம் இது.

உங்கள் மொபைல் போனை காணவில்லை என்றால் உடனே பதற்றம் அடைய வேண்டாம். அது கைத் தவறுதலாக எங்காவது வைக்கப் பட்டிருந்தால், வேறு ஒரு போனில் இருந்து ரிங் அடித்து, அது எழுப்பும் ஒலியைக் கொண்டு அது எங்கிருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடித்துவிடலாம்.  ஒரு வேளை அது உங்கள் மிக அருகிலேயே கூட இருந்து, சைலன்ட் மோடில் வைக்கப் பட்டிருந்தால், அதை எப்படிக்  கண்டுபிடிப்பீர்கள்? அதனை எப்படித் தேடுவது என்பதைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்!

தேடிக் கண்டடையாமல், கடைசி வாய்ப்பாக உங்கள் மொபைல் போன் காணாமல் போயிருக்கும் என்று வைத்துக் கொள்ளுங்கள்… இப்படி இந்த இரண்டு நிகழ்வுகளில் எதுவாக இருப்பினும் சரி, உங்களின் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தாலும் சரி அதை ரிங் செய்ய வைத்து அதன் இருப்பிடத்தை கண்டறிய ஒரு மிக எளிமையான வழி இருக்கிறது.

அதைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

படி #01: கணினியில் ப்ரவுஸரை ஓபன் செய்து ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் பக்கத்திற்கு செல்லுங்கள்…

படி #02: அடுத்து ஆண்ட்ராய்டு மொபைல் போனில் எந்த ஜிமெயில் அக்கவுன்ட் கொண்டு லாக்-இன் செய்திருந்தீர்களோ, அதைக் கொண்டு இப்போது லாக் இன் செய்யுங்கள் …

படி#03:  படி ஒன்றின் மூலமே, அக்கவுன்டில் இணைக்கப்பட்டிருக்கும் கருவிகளை உங்களால் திரையில் பார்க்க முடியும்.

படி #04: அடுத்து திரையில் ரிங், லாக் அன்டு இரேஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதை கவனியுங்கள்.

படி #05: ரிங் பட்டனை க்ளிக் செய்யுங்கள். அவ்வாறு செய்தவுடன் உங்களது போன் சைலன்ட் மோடில் இருந்தாலும் ரிங் ஆகும். இப்போது, உங்கள் மொபைல்  போன் அருகில் இருந்தால், அதனை உடனே நீங்கள் கண்டு எடுத்துக் கொள்ளலாம் இல்லையா?

பின்குறிப்பு : 1. ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட மொபைல் என்றால், இந்தக் குறிப்பு உங்களுக்கு பயன் தராது.

செயல்திறன்மிக்க மொபைல் டேட்டா அல்லது வைஃபை இணைப்பு இல்லாத ஆண்ட்ராய்டு சாதனங்களில் இந்த கூகுள் டிவைஸ் மேனேஜர் செயல்படாது.

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img