எப்போ தொங்கப் போறீங்க..?! ஜோதிமணி எம்பிப் போட்ட ‘அந்த’ டிவீட்டுக்கு காய்ச்சு எடுக்கிறாங்க நெட்டிசன்ஸ்..!

Published:

jothimani tweet rw - 2026

தெய்வம் நின்று கொல்லும். ஈழத் தமிழர் கதறிய போது இங்கே அதிகார போதையில் அகங்காரமாய் சுற்றிய அத்தனை பேரையும் தெய்வம் நிச்சயம் நின்று கொல்லும்… – என்று குறிப்பிட்டிருந்தார் ப்ரசாந்த் ரங்கசாமி என்பவர் தனது டிவிட்டர் பதிவில்!

இதற்கு ஜோதிமணி எம்.பி., போடா மூட்டாள் என்று பதில் அளித்துள்ளார். ஆனால் அது ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப் பட்டு சமூகத் தளங்களில் வைரலாகவே, தனது டிவிட்டை அவர் டெலிட் செய்துள்ளார்.

இருப்பினும், அந்த டிவீட் பதில், தான் எழுதியது அல்ல என்றும், சங்க பரிவாரங்கள் வேண்டுமென்றே டேமேஜ் செய்வதாகவும் ஒரு பதிவினை டிவிட்டரில் எழுதினார்.

https://twitter.com/vanamadevi/status/1165562504409300992

டிவி.,க்களில் தலை காட்டியும் சமூக தளங்களில் ஆக்டிவ்வாக இயங்கியும் மட்டுமே கரூர் தொகுதியில் தேர்தலில் நிற்பதற்கு சீட் கிடைக்கப் பெற்றவர் ஜோதிமணி என்று ஒரு குற்றச்சாட்டை அவர் மீது கட்சிக்காரர் களே வைப்பதுண்டு. இந்நிலையில், தான் அவ்வாறெல்லாம் பதில் எழுதவோ, ரிடிவீட் பண்ணவோ நேரமில்லாத நபர் என்று கூறிக் கொள்வதை கலாய்க்கிறார்கள் சமூகத் தளங்களில் !

இது குறித்து அவர் எழுதிய பதில் கருத்தில்…

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

சங்கப்பரிவாரங்களின் பெய்டு ட்ரோல்ஸ் சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் எனது Id க்களை போர்ஜரி செய்யும் பணியைத் துவங்கியிருக்கிறார்கள். பிஜேபியிடம் நிறைய பணம் இருக்கலாம் அதற்காக தமிழ் ஒழுங்காக எழுதக்கூடத் தெரியாதவர்களை பணிக்கு அமர்த்தவேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்! @itisprashanth – என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த நபர், யாரும் எதுவும் செய்யல அக்கா. இந்த ரிப்ளை நீங்கள் செய்தது. செய்து விட்டு உடனே அழித்து விட்டீர்கள். இதற்கு மற்றவர்கள் மீது பழி போட வேண்டாம். – என்று பதிலளித்துள்ளார்.

நான் சாதரணஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறேன். ஐ போன் பயன்படுத்துவதில்லை. எனதுபெயரில் உள்ள பதிவு ஐ போனில் செய்யப்பட்டுள்ளது.பொதுவாக நான் மற்றவர்கள் பதிவுகளில் கமெண்ட் செய்வதில்லை.அந்தளவிற்கு நேரமும்மில்லை. இவ்வளவு தரம்தாழ்ந்த செயலை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை தம்பி. நன்றி – என்கிறார் ஜோதிமணி.

ஆனால் அவர் தான் எழுதினார் என்று ஆதாரத்துடன் பலரும் அந்த டிவிட்டர் பதிவினை பதிலிடுகிறார்கள்.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டபோது திரை விமர்சகர் பிரசாந்த் என்பவர், “இலங்கை தமிழர் படுகொலையில் தொடர்புடைய யாரும் கடவுளின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” என்று பதிவிட்டார். அதற்கு காங்கிரஸ் எம்.பி சோதிமணி, “போடா முட்டாள்” என்று பதிவிட சர்ச்சை தொடங்கியது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

முட்டாளை…மூட்டாள் என்று குறிப்பிட்டிருந்ததால், தாம் அவ்வளவு பிழையுடன் தமிழ் எழுத மாட்டோம் என்று குறிப்பிட்டு, இது பாஜக., சங்க பரிவாரத்தின் போட்டோஷாப் வேலை என்று குறிப்பிட்டார் ஜோதிமணி.

ஆனால், ஒரு எம்.பி. இப்படி பேசலாமா என்று பலரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, தான் போட்ட ட்விட்டை டெலீட் செய்துவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதில்அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், உங்களது அக்கௌன்ட்டில் இருந்துதான் பதிவு வந்தது. இப்படி பொய் சொல்கிறீர்களே என்று அவரை கேள்வி கேட்க, பதில் சொல்ல முடியாமல் திணறினார் ஜோதிமணி

இந்நிலையில் இன்று ஜோதிமணிதான் அந்த பதிவை போட்டார் என்றும், அவரது அக்கௌன்ட்டில் இருந்துதான் அந்த பதிவு வெளியிடப்பட்டது என்றும் டிவிட்டர் விளக்கம் அளித்துள்ளது. இதன் மூலம் நெட்டிசன்கள் ஜோதிமணியை கழுவி ஊற்றி வருகின்றனர்.

கடந்த வருடம் ஹெச்.ராஜா ஒரு பதிவினைச் செய்திருக்க, அது அட்மின் செய்த தவறு, சரி செய்துவிட்டேன் என்று ஹெச்.ராஜா கருத்துப் பதிவிட ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அப்போது, “நானாக இருந்தால் தொங்கிருப்பேன்” என்று ஜோதிமணி டிவிட்டரில் கிண்டல் செய்தார்.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

தற்போது டிவிட்டர் பதிவு குறித்த ஆதாரத்துடன் ஜோதிமணி சிக்கியிருப்பதால், “எப்போது தொங்க போகிறீர்கள்” எனக் கேட்டு அவருக்கு பதில் கேள்வி கேட்டுவருகின்றனர்.

முன்னதாக, ஜோதிமணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஆளூர் ஷாநவாஸ் ஆதரவாக கருத்துப் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், டிவிட்டர் பதிவுகளில் ஜோதிமணி கிண்டல் அடிக்கப் பட்டு வருகிறார்.

முன்னர், விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கைத் தமிழர்களின் கொடூரக் கொலைக்கும் அவர்களது இந்த நிலைக்கும் தமிழகத்தில் உள்ள திமுக.,வும், காங்கிரஸும்தான் காரணம் என்று சொல்லி தமிழர்கள் என்ற போர்வையில் அரசியல் செய்து வந்தனர்.

ஆனால், இப்போது திமுக., காங்கிரஸுடன் கூட்டு சேர்ந்தும், பாஜக., எதிர்ப்பு என்ற ஒற்றை அரசியலால் எம்.பி., பதவியைப் பிடித்து கல்லாப் பெட்டியை நிரப்பிக் கொண்டு வருவதால், அந்தத் தமிழ் நெஞ்சங்களுக்கு காங்கிரஸும் திமுக.,வும் புனிதர்கள் ஆகி விட்டனர். அதைத்தான் ஜோதிமணியின் டிவிட்டர் பதிவுக்கு பதிலாக ஆதரவுக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img