இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம்!

உரத்த சிந்தனை துணுக்குகள் லைஃப் ஸ்டைல் வணிகம்
subramaniam swami - 2026

2016 இல் சுப்ரமணிய ஸ்வாமி ஜிஹாதிகள் பற்றி ஹிந்து முன்னணி கேசட் வெளியிட்டபோது பேசிய பேச்சு இது. தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள ஜிஹாதி ஆபத்து !
ஹிந்து முன்னணி காஸட் வெளியீட்டு விழா !
சுப்ரமணிய சுவாமி பேச்சின் ஒரு பகுதி !

இந்தியாவிற்கு உடனடித் தேவை பொது சிவில் சட்டம். மிகவும் குறைவான அளவே உள்ள மைனாரிட்டி மக்கள் நம்மை ஆட்டிப்படைக்க நாம் ஒரு நாளும் அனுமதிக்கக் கூடாது. நாம் இவ்வாறு இருப்பதற்கு ஒரே காரணம் நமக்கு இருக்கும் ஜாதி ரீதியான குழப்பங்களே..! இந்தியாவில் இந்த ஜிஹாதிகள் வளர்வதற்கு காங்கிரஸ், திமுக, அதிமுகக்களே முக்கிய காரணம்.

அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் பொது சிவில் சட்டத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில், இவர்களே மைனாரிட்டி என்ற பெயரிலும், மதச்சார்பின்மை என்ற பெயரிலும் இதைப் பெரிதாக எதிர்க்கிறார்கள். ஆஸ்திரேலியாவில், பொது சிவில் சட்டத்தை அறிமுகப் படுத்திய போது சில அடிப்படைவாதிகள் எதிர்த்தனர். உடனே அந்த அரசாங்கம், எங்கள் சட்ட திட்டங்களுக்குக் கீழ்படிந்து வாழ விருப்பமில்லை என்றால் தாராளமாக உங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு சென்று வாழலாம் என்று கூறியதும் அடங்கிவிட்டனர். அப்படித்தான் நாமும் நம் நாட்டிலும் நடந்து கொள்ளவேண்டும்.

பிரிட்டிஷ் காலங்களில் எழுதப்பட்ட அத்தனை சரித்திரப் புத்தகங்களையும் மொத்தமாக எரிக்க வேண்டும். அவர்கள் வேண்டுமென்றே 1000 ஆண்டுகள் ஆண்ட சோழர்களையும், மராட்டிய சிவாஜி, குப்தர்கள், மௌரியர்கள் பற்றிய சரித்திரங்களை எல்லாம் மறைத்து சின்ன பத்திகளாக மட்டும் கொடுத்துவிட்டு, அக்பர், ஷாஜஹான், ஔரங்கஸீப், திப்பு சுல்தான் பற்றியெல்லாம் ஒரு முழுப் பாடமாக அமைத்தார்கள். நம்மை முட்டாள்களாகவும் தாழ்வு மனப்பான்மை உடையவர்களாகவும் செய்வதற்காகவே இப்படி எழுதி வைத்தார்கள். இந்த இரண்டின் அடிப்படையில் உருவானதே திராவிட இயக்கங்கள். இந்தியாவில் தோன்றிய முதல் ஹிந்து எதிர்ப்பு இயக்கம் திராவிட இயக்கம். அதன் பரிணாம வளர்ச்சியே திமுக, அதிமுக முதலியவை.

எங்கெல்லாம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்கள் சகிப்புத்தன்மையை கடைப்பிடிப்பதில்லை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மேல்விஷாரம் என்னும் டவுன் பஞ்சாயத்தில் ஹிந்துக்கள் மிக மோசமாக நடத்தப்படுகிறார்கள். இதுபோல் இன்னும் 40 பஞ்சாயத்துக்கள் தமிழ்நாட்டில் உள்ளன. காரணம் அந்த இடங்களில் முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அடிப்படை மனித உரிமை அந்த இடங்களில் ஹிந்துக்களுக்கு மறுக்கப்படுகிறது.

நரேந்திர மோடிஜி பிரதமரான பிறகு இப்போது தான் தமிழ்நாட்டில் ஒரு விழிப்புணர்வு தோன்றியிருக்கிறது. மேலும் M K ஸ்டாலின், தங்கள் கட்சியான திமுகவில் 80 % க்கும் மேல் ஹிந்துக்கள் இருக்கிறார்கள் என்று அறிக்கை விடுகிறார். அதே சமயம் தமிழ்நாட்டில் ஹிந்துக்களுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுக்க போலீஸுக்கு அரசு அதிகாரம் வழங்கவில்லை என்று போலீஸ் அதிகாரிகளே சொல்கிறார்கள்.

நம்முடைய உடனடித் தேவை ஜாதிகளைக் கடந்து ஒற்றுமையாக இருப்பதே. உறவுகளுக்குள் தாராளமாக ஜாதிரீதியாகப் பழகலாம். ஆனால் பொதுவில் இவைகளைக் கடந்து ஹிந்துக்களாக ஒன்று கூடினால் ஒழிய இஸ்லாமிய பயங்கரவாதிகளை எதிர்கொள்வது மிகவும் கடினம்.

  • எஸ்.பிரேமா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.