முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை தமிழகம் துணுக்குகள் லைஃப் ஸ்டைல்
cm thangamani mee

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது  உறுதியானது.இதையடுத்து அவருடன் நேற்று சந்திப்பில் கலந்து கொண்ட முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதியானது. மத்திய அமைச்சருடனான கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய அனைவருக்கும்  பரிசோதனை செய்யப் பட்டது அந்த வகையில் அமைச்சர் தங்கமணி நேற்று ஒருவனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் முடிவுகள் இன்று தெரிந்த நிலையில் மின்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா நோய் தொற்று இன்று உறுதியான நிலையில் தலைமை செயலகத்தில் முதல்வர்  எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்றிருந்தார். 

அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர்  எடப்பாடி மற்றும் அதிகாரிகள் தங்களை பரிசோதனைக்கு உள்ளாக்கி கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜூலை 7 செவ்வாய்க்கிழமை நேற்று தலைமைச் செயலகத்தில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் பி.தங்கமணி தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் குறைவான நோய்த்தடுப்பு மற்றும் நிவாரண நிதியாக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 5 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். அப்போது, அவரும் முதல்வருடன் நெருங்கி நின்றிருந்தார். 

இதை அடுத்து இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் உடன் பங்கேற்ற அதிகாரிகள்  அனைவரும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.