கன்னியாகுமரியில் கடல் சீற்றம்..

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டநிலையில் மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.

உலகப்புகழ் பெற்ற கன்னியாகுமரியில் கடல் நடுவில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.  இவற்றை பார்வையிட  தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.  
சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக  படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி என்பதால் அதிகாலையில் இருந்தே கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் படகுமூலம் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

  இன்று அதிகாலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் திடீர் என்று தாழ்வானது, மறுபுறம் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டதால் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து  தொடங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து கடல் சீற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் தெரிவித்து உள்ளது. இதனால் ஆர்வத்துடன் வந்த சுற்றுலா பயணிகள்  ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். 

கன்னியாகுமரியில் மற்றும் ஒரு சிறப்பு இங்கு சூரிய உதயம் அஸ்தமனம் இரண்டையும் சம பார்த்து ரசிக்கலாம்.இன்றுபௌர்ணமி என்பதால் சூரிய அஸ்தமனம் நிலவுஉதயம் பார்க்க கன்னியாகுமரியில் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தது.இன்று மழை மேகங்களால் சூரிய உதயம் அஸ்தமனம் பார்க்கமுடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற படைத்தனர்.

images 33 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

Topics

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Entertainment News

Popular Categories