Homeவீடியோகரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி திருவிளக்கு பூஜை!

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமி திருவிளக்கு பூஜை!

-

கரூர் மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி பௌர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற, அம்மன் ஆலயங்களில் ஒன்றான, கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில், புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட, திருவிளக்கு பூஜை, சிறப்பாக நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, ஆலய மண்டபத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், தனித்தனியே அமர்ந்தார்கள். அவர்களுக்கு, வாழை இலை, விளக்கு திரி, விளக்கு எண்ணெய், மஞ்சள், பச்சரிசி, குங்குமம் உள்ளிட்ட பொருட்கள் ஆலயத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

அதன்பின், திருவிளக்கு பூஜை, சிறப்பாகத் தொடங்கியது. ஆலய திருவிளக்கு முன் அமர்ந்து, வேத மந்திரங்கள் ஓதியபடி, குங்குமத்தால் அர்ச்சனை நடைபெற்றது. அதன் பின், பக்தர்களும் தங்கள் முன் இருந்த திருவிளக்குகளுக்கு, குங்குமத்தால் அர்ச்சனை செய்தபின், தூப தீபங்கள் காட்டி, மகா தீபாராதனை செய்தனர்.

கரூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற, புரட்டாசி மாத பௌர்ணமி, திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும், ஆலயத்தின் சார்பில், விபூதி, குங்கும பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -