ஹூஸ்டனில் சீக்கிய போலிஸ் அதிகாரி சுட்டுக் கொலை!

Published:

sing thalival - 2026

ஹூஸ்டன் நகரைச் சேர்ந்த சீக்கிய போலீஸ் அதிகாரியான சந்தீப் சிங் தாலிவால் (42) சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்தவர் சந்தீப் சிங் தாலிவால்.

கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த இவர் 2015ல் நாடு முழுவதும் பிரபலமானார். சீக்கியரான அவர் தனது பணியின் போது தலைப்பாகை மற்றும் தாடி வைத்துக் கொள்ள வேண்டும் என போராடி அனுமதி பெற்றார். மேலும் 2017ல் ஹார்வே சூறாவளி தாக்கியபோது உடனடியாக நிவாரணப் பொருட்களை சேகரித்து மக்களின் பாராட்டை பெற்றார்.

ஹாரிஸ் கவுன்டியின் துணை ஷெரீப்பாக பணியாற்றி வந்த அவர் நேற்று முன் தினம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்தார். அப்போது ஒரு காரை அவர் நிறுத்தியுள்ளார்.

அந்தக் காரில் இருந்த நபர் திடீரென துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டார்.
இதில் பலத்த காயமடைந்த தாலிவால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

அவரை சுட்டுக் கொன்றதாக அந்த காரில் வந்த நபரும் அவருடன் இருந்த பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது கொடூரமான சம்பவம். பட்டப் பகலில் நடந்துள்ள கொலை ” என ஹாரிஸ் கவுன்டியின் ஷெரீப்பான எட் கோன்சலஸ் கூறியுள்ளார். ‘அமெரிக்காவில் சீக்கிய போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. சமீபத்தில்தான் ஹூஸ்டன் நகருக்கு சென்றேன்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

அவருடைய குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என பா.ஜ. வைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.

Related articles

Recent articles

spot_img