எனக்கு திருமணம் என்னை கூட்டி செல்லுங்கள்! சீனாவில் கதறும் ஆந்திரப் பெண்!

karona 1 - 2026

எனக்கு 18ம் தேதி கல்யாணம்.. எப்படியாவது இந்தியா அழைத்துச் செல்லுங்கள் என அதிகாரிகளுக்கு சீனாவிலிருந்தபடி வீடியோவில் கோரிக்கை வைத்துள்ளார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒரு இளம் பெண்.

வுஹான் மாகாணத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை இந்தியா சிறப்பு விமானம் மூலமாக தாயகம் அழைத்து வந்தது. அப்போது அதிகமாக காய்ச்சல் அடிப்பதை காரணம் காட்டி, “நீங்கள் எங்களோடு வர வேண்டாம்” என கர்னூலை பூர்வீகமாக கொண்ட அன்னம் ஜோதியை அங்கேயே அதிகாரிகள் விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இவர் டிசிஎஸ் நிறுவனத்திற்காக பணியாற்றுபவர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால்தான் காய்ச்சல் இருந்திருக்கும் என அதிகாரிகள் நினைத்தனர்.
தீவிரமடையும் கொரோனா.. கேரளாவில் 3வதாக ஒருவருக்கு வைரஸ் தாக்குதல்.. உறுதி செய்த கேகே சைலஜா!

ஆனால், தனக்கு காய்ச்சல் குணமடைந்துவிட்டதாகவும், எப்படியாவது அழைத்து செல்லுங்கள் எனவும் அன்னம் ஜோதி வீடியோ மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார். இவருக்கு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது என்பதுதான் இதில் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. வீடியோவில் ஜோதி கூறுகையில், என்னுடன் பணியாற்றும் சுமார் 58 பேர் இந்தியா அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

karona - 2026

நானும் அதே விமானத்தில் வூஹானிலிருந்து ஆந்திரா வர வேண்டியது. ஆனால், எனக்கும், மற்றொருவருக்கும் காய்ச்சல் இருந்தது. இதற்காக, முதல் விமானத்தில் எங்களை ஏற்றவில்லை. 2வது விமானத்தில் கூட்டிச் செல்வதாக கூறினர். ஆனால் பின்னர், அதிகாரிகளை போனில் தொடர்பு கொண்டு, கேட்டபோது 2வது விமானத்திலும் அழைத்துச் செல்ல முடியாது என கூறிவிட்டனர்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறது. உங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லலை என சீன அதிகாரிகள் உறுதி செய்யவில்லை. எனவே அழைத்து செல்ல முடியாது என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். ஆனால் எனக்கு இப்போது காய்ச்சல் குறைந்துவிட்டது. மூச்சு திணறல் உள்ளிட்ட கொரோனா வைரஸ் நோய் அறிகுறி எதுவுமே இல்லை. இது சாதாரண பிரச்சினைதான் என்று தெரிகிறது.

எனவே, என்னை இந்தியா அழைத்துச் செல்லுங்கள். என்னை அங்கு வைத்து சோதிட்டு பார்த்தாலும் ஓகேதான். இவ்வாறு ஜோதி நெகிழ்ச்சியோடு கோரிக்கை வைத்துள்ளார்.

ஜோதியை எப்படியாவது மீட்டு வாருங்கள் என்ற கோரிக்கை ஆந்திரா முழுக்க எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை. அதேநேரம், சீனாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் யாரையுமே அழைத்து செல்ல முடியாது என அந்த நாடு அறிவித்துவிட்டது.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

Topics

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories