சீனாவின் காலனி நாடாகும் இலங்கை! இந்தியாவை வளைக்கும் திட்டம்!

srilanka china tie
srilanka china tie

இந்தியாவை சுற்றி வளைத்துப் போட நினைக்கும் சீனா..!?

உலகமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், சீனா தனது ஆக்டோபஸ் கரங்களால், அனைத்து சிறிய நாடுகளையும், வளைத்துப் போட முயற்சி செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக இந்தியாவை சுற்றி உள்ள அண்டை நாடுகளில், சீனா, தனது இரும்பு கரத்தை நீட்டி தன்னுடைய கைப்பாவையாக மாற்ற முயற்சி செய்து வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக, இலங்கையில் பெருமளவு முதலீடு செய்து தன் வசப்படுத்த முயற்சி செய்து வருகின்றது. அதன் மூலம், இந்தியாவிற்கு தொடர்ந்து நெருக்கடி தர திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கூறி வருகின்றனர்.

இலங்கை : மொத்த நிலப்பரப்பு – 65,610 சதுர கிலோ மீட்டர் (square kilo metres) ஜூன் 11, 2021 நிலவரப்படி, இலங்கையின் மொத்த மக்கள் தொகை – 2,14,92,690.

சராசரியாக ஒரு நாளில் 887 நபர்களின் பிறப்பும்,
406 நபர்களின் மரணமும் நிகழ்கின்றன.
புத்த மதத்தினர்- 70.2%, இந்து – 12.6%, இஸ்லாமியர்கள் – 9.7%,
ரோமன் கேத்தோலிக் – 6.1%, இதர கிறித்தவர்கள் – 1.3%…

அம்பாந்தோட்டை துறைமுகம் (Hambantota Port) :
அம்பாந்தோட்டை துறைமுகம், 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப் பட்டு, 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, அன்றைய இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறக்கப்பட்டு, தொடர்ந்து செயல் பட்டு வருகின்றது.

கொழும்பு துறைமுகத்திற்கு அடுத்ததாக, இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய துறைமுகமாக இந்த துறைமுகம் உள்ளது.

hambantota
hambantota

2007 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கை அரசு, சீனாவிடம் இருந்து, 1.263 பில்லியன் டாலர் அளவிற்கு பணத்தை, முதலீடாகவும் கடனாகவும் பெற்றது. அதில், பெரும்பாலான முதலீடு அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு செய்யப் பட்டது.

“இலங்கையின் மத்திய வங்கி” 2015 மற்றும் 2016 வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் உள்ள துறைமுகத்திலேயே மிகவும் எதிர்மறையான வளர்ச்சியை (Negative Growth) ‘அம்பாந்தோட்டை துறைமுகம்’ மட்டும் தான் கொண்டு இருக்கின்றது என தெரிவித்தது.

கொழும்பு துறைமுகம் மேம்படுத்தப் பட்டதால், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முக்கியத்துவம் இருக்காது” என ‘ஆசிய கடல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு” (The Asia Maritime Transparency Initiative) தெரிவித்து இருந்தது.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

கப்பல் வருகை குறைந்ததாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருமானம் மிகவும் குறைந்ததாலும், இந்தியா உட்பட பல நாடுகள், அந்தத் துறைமுகத்தில், முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டி வந்தன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையகப்படுத்த சீனா முயற்சி செய்தது.

shipping lanes
shipping lanes

2017 ஆம் ஆண்டு, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80% பங்குகளை சீனா வணிகத் துறைமுகம் (China Merchant’s Port) நிறுவனத்திற்கு, 99 ஆண்டுகள் குத்தகைக்கு வழங்கியது, இலங்கை. இதனுடன் துறைமுகம் சுற்றியுள்ள 1,235 ஏக்கர் நிலங்களையும் சேர்த்து குத்தகைக்கு வழங்கியது, இலங்கை. மீதமுள்ள 20 % பங்குகளை, இலங்கை துறைமுகம் (Sri Lanka Port’s Authority) தன்வசம் வைத்துக் கொண்டது.

முதலில், 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு, சீனா வணிகத் துறைமுகம் (China Merchant’s Port – CM Port) அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலீடு செய்தது. பின்னர், மேற்கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்க, 700 முதல் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களை, கூடுதலாக செலவு செய்தது.

சரக்குகளை கையாளும் நடைமுறையை “Roll On Roll Off” என்று அழைப்பர். ஒரு பொருள், கப்பலில் இருந்து எவ்வாறு ஏற்றப் படுகின்றது, கப்பலில் இருந்து எவ்வாறு இறக்கப் படுகின்றது என்பதைக் குறிக்கும், ஒரு தொழில்நுட்ப சொல்லாகும். கிரேன் மூலமாக பொருட்களை வைப்பதற்கு பதிலாக, எளிதாக உருண்டு பொருட்கள் வெளியே வரும் வகையில், கப்பலில் பொருட்களை ஏற்றும் வகையில் இயங்கக் கூடிய தொழில் நுட்பத்தின் பெயர் அது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் காரணமாக துறைமுகம் வளர்ச்சி அதிகமானது. சுமார் 136 சதவீதம் அளவிற்கு, கப்பல்களை கூடுதலாக கையாளும் திறமையை பெற்றது. இதன் மூலம், ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் சிறந்த ஒரு துறைமுகமாக, அம்பாந்தோட்டை துறைமுகம் கருதப்பட்டது.

ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்து, அம்பாந்தோட்டை துறைமுகம் அருகில் உள்ளது. சீனாவில் உள்ள சென்ஷென்னில் இருந்து துறைமுகம் சென்று சேர 11 நாட்களும், சிங்கப்பூரில் இருந்து சென்று சேர மூன்று நாட்களும், துபாயில் இருந்து சென்று சேர ஐந்து நாட்களும், கென்யாவில் இருந்து சென்று சேர ஆறு நாட்களும், தென்னாப்பிரிக்காவில் இருந்து துறைமுகம் சென்று சேர ஒன்பது நாட்களும் என பயண நேரம் வெகுவாக குறைந்தது.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

துறைமுகம் அருகே சீனாவின் ஷான்டோங் ஹேவுவா நிறுவனம் (Shandong Haohua Tyre Co. Limited), 9 மில்லியன் டாலர் மதிப்புள்ள டயர் தொழிற்சாலையை ஆரம்பிக்கிறது. மேலும் பல நிறுவனங்களை, துறைமுகம் அருகே சீனா ஆரம்பித்து செயல்படுத்தி வருகின்றது.

அம்பாந்தோட்டை துறைமுகமானது, 4 ஆயிரத்து 500 எண்ணெய் கப்பல்கள் உட்பட மொத்தம் 36,000 கப்பல்களை கையாளும் வசதி கொண்டது. பயண நேரம் குறைவதால், எரிபொருள் தேவையும் குறையும். இதன் மூலமாக, பொருளாதாரமும் மேம்படும்.

சீன மொழி உள்ளே.. தமிழ் மொழி வெளியே…
சீனாவின் ஆதிக்கம் அதிகம் ஆனவுடன் தமிழ் மொழி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. சீன மொழியான மாண்டரின் பல இடங்களில் புகுத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இது சம்பந்தமாக ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், “தமிழர்கள் சீனாவிற்குச் சென்று, தற்காப்பு கலையை ஐந்தாம் நூற்றாண்டிலேயே, கற்றுக் கொடுத்தனர். ஆனால், தற்போது சீனாவினர் தமிழ் மொழியை புறந்தள்ளி, தங்களுடைய மொழியான மாண்டிரினைப் புகுத்துவது வேதனையாக இருக்கின்றது”, என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

அறிவிப்பு பலகைகளிலும், தமிழ் மொழியை புறக்கணித்து, சீன மொழியான மாண்டிரினே, பல இடங்களில் காட்சி அளிக்கின்றது.
இலங்கையில் திட்டமிட்டு அழிக்கப்படும் இந்து கோவில்கள்:
2009 இறுதிப் போருக்கு பின்னர், நிறைய இந்துக் கோவில்கள் திட்டமிட்டு அழிக்கப் படுவதாக, குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து கொண்டே வருகின்றது. ஜனவரி 18, 2021 அன்று, முல்லைத்தீவில் உள்ள குறுந்தூர்மலையில் சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்டு, அங்கு, புத்தர் சிலைகள் நிறுவப்பட்டது. இதன் மூலமாக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், சிங்களர்களை குடியமர்த்த திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

இந்தியப் பெருங்கடலில் (Indian Ocean) சீனா தன்னுடைய ஆதிக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், பல கோடி முதலீடுகளை செய்து வருகிறது. இதனை, இந்தியா உட்பட பல நாடுகள், தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகள் இலங்கையில், சீனாவின் முதலீட்டை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறது. அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றியும் ஆராய்ந்து வருகின்றனர். இந்தியா கடலோரத்திற்கு மிக அருகில், 50 கிலோ மீட்டர் தொலைவில், நைநாத்தீவு, நெடுந்தீவு, அனலைத்தீவு என்ற 3 தீவுகளில், சீனாவின் எரிவாயு நிலையம் அமைய இருக்கின்றது.

இந்தியாவை சுற்றி வளைத்து விட, எல்லா பகுதியிலும், தன்னுடைய பலத்தை சீனா அதிகரித்துக் கொண்டே வருகின்றது. பாகிஸ்தானில் ஏராளமான முதலீடுகளும், மாலத்தீவில் ஏராளமான முதலீடுகளும், அது போல இலங்கையிலும் ஏராளமாக முதலீடுகளை சீனா செய்து கொண்டு வருகின்றது. இதன் மூலம், இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்க, சீனாவினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதனை உணர்ந்து கொண்ட மத்திய அரசு, பல சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அண்மையில், லட்சத்தீவில், நமது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக, நிறைய நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை, இந்திய அரசு மேற்கொண்டு வருவதை, இங்கு உள்ள, அரசியல் கட்சிகளும், சமூக நல ஆர்வலர் என சொல்லிக் கொள்பவர்களும், தொடர்ந்து எதிர்த்துக் கொண்டே வருகின்றனர்.

srilanka port
srilanka port

சென்னை அருகே பழவேற்காடு அருகாமையில் விஸ்தரிக்கப் பட இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தை, போலியான காரணத்தைக் கூறி, முட்டுக்கட்டை போட, சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.
இங்கு உள்ள துறைமுகத்தை, பலப் படுத்தினாலே, பல கப்பல்கள் இங்கு வர வசதியாக இருக்கும். அதனால், இங்கும் தொழில் வளரும். பொருளாதாரமும் மேம்படும். நமக்கும் அண்டை நாட்டின் மீது ஒரு கண் வைக்க, அது வழி வகுக்கும். அதனை அறிந்து கொண்டு செயல்படும் மத்திய அரசை, சிலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தேச நலன் சார்ந்து யோசிக்கும் மத்திய அரசை விமர்சிக்காமல், நமது நாட்டு நலன் கருதி, மத்திய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு, தோளோடு தோள் கொடுத்து, பலம் சேர்க்க வேண்டிய நேரம் இது.

“பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே”
-பாரதியார் 

– அ.ஓம்பிரகாஷ்
(Centre for South Indian Studies, Chennai)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories