மோடி ஆட்சியில்தான் லடாக் பற்றி ஐ.நா., விவாதித்து இருக்கிறது!: எம்.பி., நாம்க்யால்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

namgyal jamyang tsering - 2026

காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப் பட்டு, அதில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று ஐ.நா., தெரிவித்து விட்டது.

லடாக் பகுதி பாஜக, எம்.பி., ஜம்யங் நாம்க்யால் ஐ.நா., விவாதம் குறித்து தெரிவித்த கருத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் எடுக்கப் பட்ட அருமையான முடிவினால்தான், ஐ.நா., சபையின் விவாதத்தில் லடாக் ஒரு பேசு பொருளாகியிருக்கிறது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, லடாக் குறித்து, நம் இந்தியா நாடாளுமன்றத்தில் கூட எவரும் விவாதித்தது இல்லை.,, என்று கூறியுள்ளார்.

லடாக் பகுதி அந்த அளவுக்கு இருட்டடிப்பு செய்யப் பட்டு, அப்படி ஒரு பகுதியே காஷ்மீரில் இல்லாதது போன்ற மாயத் தோற்றத்தை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது என்பது அவரது குற்றச்சாட்டாக இருந்தது.

மேலும், காஷ்மீரைப் பற்றி மட்டுமே ஏட்டளவில் படித்து விட்டு, அதை மட்டுமே ஒரு பிரச்னையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது லடாக் பகுதி தனியாக பிரிக்கப் பட்ட பிறகு லடாக் குறித்து சர்வதேச சமூகத்துக்கு தெரியவந்துள்ளது என்பது அவர் கருத்தாக இருக்கிறது.

இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சரின் அறிக்கை குறித்து நாம்கியால் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அரசு எடுக்கும் எந்த விதமான கொள்கை முடிவுக்கும் லடாக் மக்கள் உறுதுணையாக முன் நிற்பார்கள். போர் எதுவும் இல்லாமல் இருந்தால் நல்லது. ஆனால் அதே நேரம் நாட்டு நலன் கருதி எடுக்கப் பட்டால், லடாக் மக்கள் அந்த முடிவில் துணை நிற்பார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.