ஏப்ரல் 22, 2021, 8:22 மணி வியாழக்கிழமை
More

  கனவின் விளைவு: இப்படி கண்டால் சனி தோஷம் நீங்கும்!

  dream-1

  எட்டுகால் பூச்சி கனவில் வந்தால் நன்மை ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள்.

  சிலந்தியை கனவில் காண்பது பொருள் வரவுக்கு வழிவகுக்கும்.

  சிலந்தி கூட்டை அழிப்பது போல கனவு வந்தால் நல்லதல்ல. அது குடும்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

  சிலந்தி கரப்பான்பூச்சியை கனவில் கண்டால் குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும்.

  அந்து பூச்சியை கனவில் கண்டால் பொருள் இழப்பு ஏற்படும் என்று அர்த்தம்.

  அட்டைப்பூச்சியை கனவில் கண்டால் எதிரிகளால் பிரச்சனைகள் ஏற்படும்.

  ஈக்கள் நம்மை சுற்றி சுற்றி வருவது போல் கனவு கண்டால் வெளிவட்டாரங்களில் பகைமை அதிகரிக்கும் என்று பொருள்.

  ஈக்கள் மொய்ப்பது போல கனவு வந்தால் வியாதிகள் வரும் என்று பொருள்.

  தேனீக்கள் தேன் கொண்டு வந்தாலும், கூட்டை கட்டுவது போல கனவு கண்டாலும் நல்லது நடக்கும்.

  தேனீக்கள் கனவில் வந்தால், வாகனப் பயணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

  வண்டுகள் தேனை சேகரிப்பது போல் கனவு வந்தால் நாம் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும்.

  பட்டாம்பூச்சி கனவில் வந்தால் குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கும்.

  பட்டாம்பூச்சி கூட்டமாக வீட்டை விட்டு வெளியே சென்றால் பண பற்றாக்குறை ஏற்படும்.

  வெட்டுக்கிளி கனவில் வந்தால் பார்க்கும் வேலையில் பாதிப்பு ஏற்படும்.

  பச்சை வெட்டுக்கிளியை கனவில் வயலில் காண்பது மிகவும் நல்லது. பறவைகள் கொத்துவது போலக் கனவு கண்டால் பொதுவாக நல்லதல்ல.

  பறவைக் கூட்டைக் கனவில் கண்டால் வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.

  பறவைத் தனது குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவதைப் போலக் கனவு கண்டால் பிள்ளை பிறக்கும்.

  பறவைகள் இறப்பதைப் போலக் கனவு கண்டால் நல்லதல்ல.

  பறவைகள் சண்டை போடுவது போலக் கனவு கண்டால் கலகம் பிறக்கும்.

  கழுகு, காக்கா போன்ற பறவைகள் வேட்டை ஆடுவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல.

  பறவைக் கூட்டை கலைப்பது போலக் கனவு கண்டாலும் நன்மை அல்ல.

  அன்னப் பறவை : அன்னப் பறவையை கனவில் கண்டால் சரஸ்வதி கடாக்ஷம் உண்டு.

  கிளிகள்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிளிகளைக் கனவில் கண்டால் தொழில் விருத்தி அடையும். நினைத்த நல்ல காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேறும்.

  கிளிகளுடன் பேசுவது போலக் கனவு கண்டால் சிறப்பான பல நல்ல பலன்களைப் பெறலாம்.

  கிளிகளைக் கூண்டில் அடைப்பது போலக் கனவு கண்டால் நல்லதல்ல.

  அதே போல நீங்கள் கிளியை கூண்டில் கண்டாலும் நல்லதல்ல.

  கிளிகள் தானியங்களைத் தின்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல பொருள் சேதம் உண்டாகும்.

  கிளி இறப்பது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல கடன்கள் வந்து சேரும்.

  காக்கையை எந்தவகையில் கனவில் கண்டாலும் நல்லதல்ல.

  அதே போல காக்கை கூட்டத்தை கனவில் கண்டாலும் நல்லதல்ல. காக்கை கரைவது போலக் கனவு கண்டாலும் நல்லதல்ல.

  ஆனால் அதே சமயத்தில் காக்கை தனது தலையை தண்ணீரில் முக்கி எடுப்பது போல அல்லது காக்கை குளிப்பது போலக் கனவு கண்டால் சனி தோஷம் நீங்கும்.

  காக்கையை அதன் குஞ்சுகளுடன் பார்த்தால் பிள்ளைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.

  அண்டம் காக்கையை கனவில் கண்டால் நெருங்கிய நண்பர் இறந்து விடுவார் என்று சாஸ்த்திரங்கள் கூறுகிறது. மொத்தத்தில் காக்கையை கனவில் காண்பது அவ்வளவாக நல்லது அல்ல

  தோன்றும்…..

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »