கொழுக்கட்டை ஸ்பெஷல்: ஏகாதசி கொழுக்கட்டை!

Published:

Screenshot_2020_0814_165219

ஏகாதசி கொழுக்கட்டை

தேவையானவை:

அரிசி ரவை, தேங்காய் துருவல் – தலா ஒரு கப், வெல்லத்தூள். – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர். – 2 கப், உப்பு. – ஒரு சிட்டிகை.

செய்முறை: கடாயில் தண்ணீர், உப்பு, ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கொதிக்கவிடவும். உடனே அரிசி ரவையைப் போட்டு கெட்டியாக கிளறி எடுத்து ஆறவிடவும். தேங்காய் துருவல், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, அரிசி ரவை கலவையில் இருந்து சிறிய கமலா ஆரஞ்சு அளவு எடுத்து உருட்டி, நடுவில் குழி செய்து 2 டீஸ்பூன் அளவு தேங்காய் கலவை வைத்து மூடி, வட்டமாக உருட்டவும். அப்படியே ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு: நம் முன்னோர்கள் ஏகாதசிக்கு இதை மட்டுமே ஒரு வேளை உணவாக எடுத்துக் கொண்டு விரதம் இருந்தனர். அதனால்தான் இந்தப் பெயர்!

ALSO READ:  சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

Related articles

Recent articles

spot_img