crimes scene - 2026

பூ வியாபாரி வீட்டில் நகை பணம் திருடிய பெண் போலீஸ் கைது!

சற்றுமுன்
crimes scene - 2026

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பூ வியாபாரி வீட்டில் நகை மற்றும் பணம் திருடிய வழக்கில் பெண் போலீஸ் ஏட்டு பாக்கியலட்சுமி (40) அதிரடியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜபாளையம் சந்திரபாண்டியபுரம் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (50). பூ வியாபாரியான இவர், கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.

சங்கரலிங்கம் வீட்டில் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த நபர், பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் (சுமார் 6 சவரன்) தங்க நகை மற்றும் ₹50,000 ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சங்கரலிங்கம் அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் நகர் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில், சங்கரலிங்கத்தின் உறவினரான பாக்கியலட்சுமி என்ற பெண் காவலருக்கு இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் காவலத்துறையில் ஏட்டாகப் பணியாற்றி வருகிறார்.

பெண் காவலர் பாக்கியலட்சுமி நகையையும் பணத்தையும் திருடியது ஆதாரங்களுடன் உறுதியானதை அடுத்து, விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் (Suspended) செய்து உத்தரவிட்டுள்ளார்.

இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது ஒரு பெண் சங்கரலிங்கம் வீட்டில் உள்ளே போய் ஏதோ பொருள் திருடியது தெரிய வந்தது

இந்த கேமரா ஆதாரத்தை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட போது இந்த நகையை திருடியது சங்கரலிங்கத்தின் உறவினர் போலீஸ் ஏட்டு பாக்கியலட்சுமி என்பது தெரியவந்தது

போலீஸ் துறையில் பாக்கியலட்சுமி வேலை செய்ததால் போலீசார் தீவிரமாக விசாரணை செய்த பிறகு அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதும் தெரிய வந்துள்ளது.