ஏ.டி.எம்.,மை உடைத்து கொள்ளை முயற்சி! சிக்கியவன் சிறுவன்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

atm robbery - 2026

ஏ டி எம் ஐ உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற சிறுவன் கைது செய்யப் பட்டுள்ளா.

சென்னை அருகே தனியார் ஏடிஎம் மையத்தில் பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சிறுவனை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் தனியார் ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. இங்குள்ள இயந்திரத்தை நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தடித்த இரும்பு கம்பியால் சிறுவன் ஒருவன் உடைத்துக் கொண்டு இருந்தான்.

அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு ஓடிச் சென்று சிறுவனை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்! காவல் நிலையத்தில் வைத்து சிறுவனிடம் போலீசார் விசாரணை செய்ததில் அந்தச் சிறுவன் திண்டுக்கல்லை அடுத்த ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுச் சிறுவன் என்பது தெரியவந்தது.

இவன் பல கொலை வழக்குகளில் தொடர்பு கொண்டு இருப்பதும் தெரிய வந்தது! இதையடுத்து மறைமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைக் கைது செய்தனர்.

இந்த ஏடிஎம் உடைப்பு முயற்சியில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் அந்த சிறுவனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.