ஏ ஆர் முருகதாஸ் இடம் ஆசி பெறுவேன் என்கிறார் மிஷன் மங்கள் இயக்குனர்

சினி நியூஸ்

mission mangal jagan sakthi - 2026

செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைகோள் அனுப்பிய இஸ்ரோவின் சாதனையை வெளிப்படுத்தும் அழகிய படம்தான் மிஷன் மங்கள் என்ற படம்! பொது மக்களிடமும் தீவிர ரசிகர்களிடமும்கூட பெரும் வரவேற்பை பெற்றுள்ளது! ரசிகர்களிடம் தரமான படம் என்று பாராட்டுக்களையும் பெற்றுள்ளது!

மிஷன் மங்கள் படத்தின் இயக்குனர் ஜெகன் சக்தி இது குறித்து கூறுகையில், ஹிந்தியில் மட்டுமின்றி தமிழில் ரீமேக் செய்யப்பட்ட மிஷன் மங்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது! இந்த படத்தின் வெற்றியை என் குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக நான் பெங்களூருவுக்கு வந்து இருக்கிறேன்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் நான்கு படங்களில் நான் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன்! சென்னை திரும்பிய பிறகு நான் அவரிடம் ஆசி பெறுவேன் என்றார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.