வெளியிட தயார் நிலையில் பரமபதம் விளையாட்டு!

சினி நியூஸ் சினிமா
paramapatham - 2026

திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர்

தமிழில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக இருக்கும் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

திரிஷா நடிப்பில் தற்போது சதுரங்கவேட்டை 2',கர்ஜனை’ `ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

paramapatham 1 - 2026

இதில் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து சென்சாருக்கு சென்றுள்ளது. படத்தை பார்த்த குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதையடுத்து அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் தீவிர முயற்சியில் உள்ளனர்.

திருஞானம் இயக்கியுள்ள இந்த படத்தில் இருவேடங்களில் திரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடித்துள்ளார். நந்தா, ரிச்சர்ட், வேல. ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

24 ஹவர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.