
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார் பாஜக., தமிழக தலைவர் எல்.முருகன். இந்த சந்திப்பு குறித்து குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, இது மரியாதை நிமித்தனமானது என்று தெரிவித்துள்ளார். ஆனால், எல்.முருகன் தமது டிவிட்டர் பதிவில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு அளித்து பெறப்பட்ட கையெழுத்திட்ட புத்தகத்தை வழங்கியதாகக் கூறியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பதிவில்…
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (28.12.2020) பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு.எல்.முருகன்
@Murugan_TNBJP அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பாஜக., தலைவர் எல்.முருகனின் டிவிட்டர் பதிவில்…
மாநில தலைவர் Dr திரு. @Murugan_TNBJP, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. @CMOTamilNadu சந்தித்து பிரதமர் திரு. @narendramodi கொண்டு வந்துள்ள தேசிய புதிய கல்வி கொள்கை சட்டத்தை ஆதரித்து தமிழக பாஜக கையெழுத்து இயக்கம் மூலம் 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட புத்தகத்தை வழங்கினார் #NEP2020
முன்னதாக, அதிமுக.,வின் நேற்றைய முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கூட்டணியிட்டு போட்டி, ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை என்றும், திராவிட இயக்கத்தை தேசியக் கட்சிகளால் அசைக்க முடியாது என்றும் அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியிருந்தார். இந்நிலையில், இன்று எல்.முருகன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துள்ளார்.