கல்லா நிரம்பினா போதும் இவர்களுக்கு.. கலாட்டா பத்தி என்ன அக்கறை?

சினி நியூஸ் சினிமா
vijay fans 1 - 2026

விஜய் நடித்த பிகில் படம் இன்று (அக்.,25) ரிலீசானது. இப்படத்தின் சிறப்புக்காட்சிக்கு தமிழக அரசு கடைசி நிமிடத்தில், அனுமதி அளித்தது.

இரவு 10 மணிக்கு மேல் தமிழக அரசு பிகில் சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளித்ததால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 650 தியேட்டர்களில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு சிறப்புக்காட்சி திரையிடப்பட்டதால், நள்ளிரவு முதலே தியேட்டர் வாசலில் விஜய் ரசிகர்கள் கூச்சலிட்டு வந்தனர். சில தியேட்டர்களில் ஒரு மணி நேரம் தாமதமாக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

vijay fans 2 - 2026

கிருஷ்ணகிரியில் பிகில் சிறப்புக்காட்சி நள்ளிரவில் வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகே உள்ள தியேட்டரில் சிறப்பு காட்சி வெளியாகாததால், ரவுண்டானா பகுதியில் உள்ள காவல்துறை தடுப்புக்களையும், சிசிடிவி கேமராக்களையும் உடைத்தனர்.

கற்களையும் வீசி தாக்கியதால், ரகளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். இது தொடர்பாக 34 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பிகில் இசை வெளியீட்டின் போது, ‛‛என் மீது வேண்டுமானாலும் கை வையுங்கள், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்” என மேடையில் வீராவேசம் பேசினார் விஜய். அதன்பிறகு இங்கு பல பிரச்னைகள் நடந்தன. ஆனால் எதுவும் பேசாமல் உம்னு, கம்னு, ஜம்முனு வெளிநாடு பறந்தார்.

vijay fans 3 - 2026

.நல்ல பழக்கங்கள், ஒழுக்கம் குறித்து திரையில் மட்டுமே பஞ்ச் வசனங்கள் பேசும் விஜய் போன்ற நடிகர்கள், தங்களின் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் செய்யும் காலித்தனங்களை நிஜத்தில் கண்டு கொள்வதில்லை.

பிகில் இசை வெளியீட்டின் போது, ‛‛என் மீது வேண்டுமானாலும் கை வையுங்கள், என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள்” என மேடையில் வீராவேசம் பேசினார் விஜய். இப்படியெல்லாம் பேசி தானே ரசிகர்களை ஏமாற்ற முடியும். பொழுது போக்கிற்கான ஒன்றை வாழ்வின் போராட்டமாக கொண்டு ரசிகர்கள் அதில் ஈடுபடுவது அவர்கள் நேரமும் பணமும் விரயம் ஆவது குறித்து அக்கறையில்லை. சமூக அக்கறை உள்ளவர்களாய் தங்களை காட்டி கொள்ளும் சில நடிகர்களுக்கு இது வேடிக்கையானது.

அவர்கள் இதன் மூலம் பெயர்,புகழ், பணம் அடைகிறார்கள் நாம் பணத்தை இழந்து, நேரத்தை இழந்து இது போன்ற வன்முறைகளால் சுயத்தை இழக்கிறோம் என்பதை ரசிகர்கள் தங்கள் தளபதி மேல் கொண்டுள்ள அபிமானத்தால், வெறியால் அறிவதில்லை. பிகில் இசை வெளியீட்டிற்கு பின் இங்கு பல பிரச்னைகள் நடந்தன. ஆனால் எதுவும் பேசாமல், ஜம்முனு வெளிநாடு பறந்தார் விஜய் என்கிறார்கள் பொதுமக்கள்.

ஆனால் அவரது ரசிகர்களோ பொது சொத்தை சேதப்படுத்தி காலித்தனம் செய்கின்றனர். இதை கண்டிக்க மாட்டார். கண்டுகொள்ளவும் மாட்டார். அவருக்கென்ன, ஒரு படத்தில் நடிக்க வேண்டியது, படம் ரிலீஸாகும் போது ஏதாவது பரபரப்பாக பேச வேண்டியது, அதை வைத்து படத்திற்கு ஒரு பெரிய விளம்பரம் தேட வேண்டியது. இதையே ஒவ்வொரு படத்திற்கும் வாடிக்கையாக கொண்டுள்ளார் விஜய் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தகைய அநாகரிகமான செயல்களுக்கு விஜய் போன்ற நடிகர்கள் கண்டனம் கூட தெரிவிப்பதில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.