ரஜினியின் கருத்துக்கு மாறுபட்ட விஜய்சேதுபதி ! சேதுபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த அரசியல் பிரமுகர்கள் !

rajini - 2026 நேற்று நடைபெற்ற துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா அவர்கள் மிக அருமையாக கையாண்டார் என்றும் அவருக்கு தனது வாழ்த்துக்கள் என்றும், காஷ்மீர் விவகாரத்தை அவர் கையாண்ட விதத்தை வைத்து அவர் யார் என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்றும் கூறினார். மேலும் மோடி – அமித்ஷாவை மகாபாரதத்தில் உள்ள கிருஷ்ணர் – அர்ஜுனனுக்கு இணையாக ஒப்பிட்டும் அவர் தனது பேச்சில் தெரிவித்தார்

ரஜினியின் இந்த பேச்சிற்கு அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இதே காஷ்மீர் விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், அந்த மாநில மக்களுடைய பிரச்சினையை அவர்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று பெரியார் அன்றே சொல்லி விட்டார் என்றும், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்

காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியானது என்று ரஜினிகாந்த் கூறிய அதே நாளில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு செய்தது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று விஜய்சேதுபதி ரஜினிக்கு எதிரான கருத்தை கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுvijai sethupathi - 2026 மெல்போர்ன் நகரில் வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை முன்னாள் கிரிக்கெட் பிளேயர் முத்தையா முரளிதரன் கேரக்டரில் நடிப்பது உறுதி என்றும் கூறி உள்ளார்.

மெல்பேர்ன் நகரில் நடைபெறும் இந்திய திரைப்படவிழாவில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள விஜய்சேதுபதி நடித்த, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றார்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

அதைத்தொடர்ந்து அந்நாட்டு வானொலி ஒன்றுக்கு பிரத்யேக பேட்டி அளித்த விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரம் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது உள்பட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.vijaisethupathi - 2026ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இந்திய திரைப்படவிழா நடைபெற்றது. இதில், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில், விஜய்சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த ’சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. இதற்காக விஜய் சேதுபதி, தியாகராஜா குமாரராஜா, நடிகை காயத்ரி ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றனர்.

அங்குள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விஜய்சேதுபதி, காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்விக்கு பதிலளித்தார். “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது ஜனநாயகத்துக்கு எதிரானது. பெரியார் அன்றைக்கே சொல்லிவிட்டார். காஷ்மீரின் பிரச்னைகளுக்கு அந்த மக்கள் தான் முடிவெடுக்க முடியும்.

உங்கள் வீட்டு விவகாரத்தில் நான் தலையிட முடியாது. ஏனெனில் அந்த வீட்டில் வாழ்பவர்களுக்கே அதன் சூழ்நிலை தெரியும். ஆகையால் நான் அவர்கள் மீது அக்கறை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் ஆளுமை செலுத்தமுடியாது”. என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.vijais - 2026மேலும் தொடர்ந்த அவர் “ ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ளும் போது, மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. அவர்கள் மீது ஆளுமை செலுத்துவது முறையற்றது.” என விஜய் சேதுபதி கூறினார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

அதுபோல, தமிழரான முத்தையா முரளிதரன் இலங்கையில் விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்தும் இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டதுடன் போர் நடைபெற்ற போதுகூட தமிழர்களுக்கு ஆதரவாக குரல்கொடுக்காதவர். போர் முடிந்த பின்னரும் சிங்கள கிராமங்களுக்கு உதவி செய்துவரும் அவர் தமிழர்களை ஒருபோதும் கண்டுகொள்வதில்லை.

இப்பேர்பட்ட தமிழினி விரோதியின் கேரக்டர் கொண்ட படம் ஒன்றில் விஜய்சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தயது இது தொடர்பாக பல அமைப்புகள் விஜய்சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வானொலி பேட்டியின்போது நெறியாளரின் கேள்விக்கு பதில் அளித்த விஜய்சேதுபதி,

இலங்கை கிரிக்கட் நட்சத்திரம் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றைப்பேசும் திரைப்படத்தில் தான் நடிப்பது உறுதி என நடிகர் விஜய் சேதுபதி என தெரிவித்தார்.

‘விஜய்சேதுபதியின் மாறுப்பட்ட கருத்து மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.pandiyarajan - 2026காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது ஜனநாயக படுகொலை என்று விஜய்சேதுபதி விமர்சித்ததை தொடர்ந்து, இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் பாண்டியராஜன்,” நடிகர் விஜய்சேதுபதி நல்ல நடிகர். அவர் கருத்து தெரிவிப்பது தவறு இல்லை. ஆனால் எந்த பிரச்சனை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு முன்பு அதன் பின்புலத்தை அறிந்து கொள்ள வேண்டும். அரசியல் சட்டம் 370, 35ஏ ஒரு வரலாற்றுப் பிழை. அது சரி செய்யப்பட்டுள்ளது ” என்று கூறினார். thmilisai - 2026விஜய் சேதுபதிக்கு கண்டனம் தெரிவித்துள்ள டாக்டர் தமிழிசை,” நாட்டின் மிக முக்கியமான பிரச்சனையில் நடிகர்கள் கருத்து சொல்லும் போது அவர்கள்தான் எல்லாம் தெரிந்தவர்கள் போல் அதிகாரப்பூர்வமாக பேசுகிறார்கள். காஷ்மீரை பற்றி தெரியாதவர்களெல்லாம் பேசுகிறார்கள் என்று ஒரு நடிகர் கூறுகிறார். அப்படியானால் அவர் எல்லாவற்றையும் முழுமையாக தெரிந்துதான் பேசுகிறாரா? என்றால் இல்லை. இதில் பெரியாரையும் துணைக்கு இழுக்கிறார்கள். காஷ்மீர் பிரச்சனையை மத்திய அரசு சரியாக கையாண்டு வருவதாக பல வெளிநாடுகள் பாராட்டி உள்ளன ” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories