அற்றுப் போகாத்த ஓர்மைகள்: பிஎஃப்ஐ.,யால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப்பின் வாழ்க்கைக் கதை!

இலக்கியம் கட்டுரைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
joseph prof - 2026

ப்ரொபசர் ஜோசப்யின் வாழ்க்கை கதை. அற்றுப் போகாத்த ஓர்மைகள் – என்ற புத்தகத்தைக் குறித்து தற்போது பலரும் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தன் அம்மா, மனைவி, மகன் கண்முன்னால் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பினரால் கை துண்டிக்கப்பட்ட ஜோசப் சாரின் வாழ்க்கை கதை.

நீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பு வழங்கியும், அவர் மனைவி சலோமி தற்கொலை செய்யும் வரை மீண்டும் விரிவுரையாளராக வேலை நல்காத கிறிஸ்தவ கல்லூரி சபை நிர்வாகத்தால் கொடுமை அனுபவித்த ஜோசப் சாரின் கதை.

atruppokathaormagal - 2026

தன் குடும்பம் பட்டினியில் சாகாமல் இருக்க ஒரு கையோடு ஆட்டோ ஓட்டி பிழைத்த ஜோசப் சாரின் கதை.

கல்லூரி நிர்வாகம் வேலை திரும்ப நல்காததால் பணமில்லாமல் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட, எல்லாம் அறிந்து ஏற்று கொள்ள தயாரான ஒரு ஹிந்து இளைஞனை திருமணம் செய்து வாழும் ஒரு மகளின் தந்தையான ஜோசப் சாரின் கதை.

மனைவியின் தற்கொலைக்கு காரணம் என வழக்கு பதிவு செய்துவிடுவாரோ என பயந்து வழக்கு தொடுக்கமாட்டேன் என எழுதி ஒப்பிட்டு வாங்கிகொண்டு மீண்டும் ஒரே ஒருநாள் மட்டும் வேலை கொடுத்து துரத்தி விட்ட கிறிஸ்தவ சபையின் குரூர நடவடிக்கைக்கு ஆளான ஜோசப் சாரின் கதை.

தீவிரவாத தாக்குதலுக்கு பயந்து இன்றும் வீட்டுமுன் நிற்கும் 2 போலீஸார் பாதுகாப்பில் வாழும் ஜோசப் சாரின் கதை.

DC Books வெளியீடு.

  • சுனில் சோமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.